’இந்தியன் – 2 ’ படத்தை ஷங்கர் கைவிட்டாரா…? ரசிகர்கள் அதிர்ச்சி… தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

இந்தியன் 2 –வை ஷங்கர் கைவிட்டதாகத் தகவல்கல் வெளியானடால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்திய திரையுலகில் தனக்கெனத் தனி அடையாளத்தையும் ரசிகர்களையும் கொண்டார் பிரமாண்ட இயக்குநர் சங்கர்.

இவர் இந்தியன் -2 வை எடுத்த நேரமோ என்னமோ அடுத்தடுத்து அவருக்கு சிக்கல்கள், பணப்பிரச்சனை, தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்துவேறுபாடு, ரோபோ படக் கதையின் பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற விசாரணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே இந்தியன் -2 படப்பிடிப்பில் நடந்த பெரிய விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொரோனா கால ஊரடங்கு காலமாக இப்படம் குறித்த அப்டேட் இல்லாமல் போனது.

குறிப்பாக கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் எவனென்று நினைத்தாய் படத்தில் நடிக்கவும் பிக்பாஸை தொகுத்து வழங்கவும் கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஷங்கர் வேறு புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டதாகவும் இதுகுறித்து இந்தியன் -2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு கடிதம் எழுதியதாகவும் வந்ததிகள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகளை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இதற்காகத் திட்டமிட்டுவருவதாகவும் லைகா  நிறுவனம் கூறி வந்ததிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Exit mobile version