எகிறிய கமல்ஹாசனின் சம்பளம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் பெறும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பமாகவுள்ளது. அக்டோபர் 3ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனே நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது முறையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் நடிகர் அர்ஜுனை வைத்து சர்வைவர் நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமான செட்டோடும் செலவோடும் ரியாலிட்டி ஷோக்களை ஆரம்பித்து ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில், இந்த மூன்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜுன் மூவருக்கும் எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகி சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 நாட்கள் கமிட்டாகி ஒரு நாளைக்கு 4 கோடி சம்பளம் என பிக்பாஸ் சீசன் 5ற்கு 60கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

நடிகர் விஜய் சேதுபதி, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டிற்கு 50 லட்சமும் நடிகர் அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சிக்காக 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version