’’ஒரு மணி நேர மழைக்கு தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது’’ –கமல்ஹாசன் டுவீட்.

சென்னையில் பெய்யும் மழை குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை என விமர்சித்துள்ளார்.

இந்திய சினிமாவின் தன்னிகரற்றத் கலைஞர் கமல்ஹாசன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கினார்.

அதன்பிறகு அவர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை விமர்சிக்கத் தொடங்கினார். இதனா அவருக்கு சில எதிர்ப்புகளும் ,விமர்சனங்களும் அதிகரித்தன.

இருப்பினும் தமிழகத்தில்  தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக அவர் உருவெடுத்து வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் அவர் நாம் தமிழர் கட்சியினரை விட அதிக சதவீதம் ஓட்டுகள் பெற்றார்.

நாட்டு நடப்புகளையும் அரசியல்நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிக்கும் கமல், நேற்று சென்னையில் பெய்த மழை குறித்து தனது டிவிட்ட பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.

குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் …எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version