’’வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்த தகுதியில்லாதவர்’’ …. முதல்வரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய கங்கன ரணாவத்

வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்த தகுதியில்லாதவர் என மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்துள்ளார்  கங்கன ரணாவத்.

பாலிவுட் பிரல நடிகை கங்கனா ரணாவத்துக்கும் மும்பைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஏற்கனவே அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியை மும்பையுடன் ஒப்பிட்டுப் பேசியது பெரும் பரப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஆளும் சிவசேனா கட்சி சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதன்பின் மத்திய அரசு தரப்பில் கங்கனாவுக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் மற்றொரு சிகிச்சையில் சிக்கியுள்ளார் அவர்.

இந்நிலையில், தசரா விழாவில் கலந்துகொண்ட மஹாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே,  நடிகை கங்கனா ரணாவத் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் தான் கஞ்சா வயல்கள் உள்ளது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடியாக நடிகை கங்கனா ரணாவத், தகுதியே இல்லாமல் பதவிக்கு வந்தவர்களின் உத்தவ் தாக்கரே மோசமானவர் என்றும், அப்பாவின் சொத்துகள், அதிகாரம், மற்றும் பதவியை தாம் அனுபவிக்கவில்லை  என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version