மண்வாசம் வீசும் தேவாவின் குரலில் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல் வெளியீடு

மண்வாசம் வீசும் தேவாவின் குரலில் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

 ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாளின் குரலில் வெளியான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. ஸ்வீட் சர்ப்பரைசாக பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத தேனிசை தென்றல் தேவா ’பண்டாரத்தி புராணம்’ பாடலில் கணீர் குரலில் பாடி ரசிக்க வைக்கிறார். இழவு வீட்டில் மனைவியின் இறப்பை தாங்கமுடியாத முதியவர் பாட தனுஷ் அங்கு வந்து சாண்டி மாஸ்டர் நடனத்தில் தனுஷ் குத்தாட்டம் போடுகிறார். தாவணிப் பாவாடையில் கெளரி கிஷன் கிராமத்து கெட்டப்பில் கவனம் ஈர்க்கிறார். 

தமிழ் சினிமாவில் இழவு வீட்டு பாடல்கள் எத்தனையோ இடம்பெற்றிருக்கின்றன. தர்மதுரை படத்தில் மக்க களங்குதைய்யா, மதயானை கூட்டம் படத்தில் உன்னை வணங்காத நாளில்லை என எல்லா பாடல்களுமே வீட்டில் மூத்தவர் யாரேனும் ஒருவர் இறந்திருப்பார் அவரைப்பற்றி இடம்பெற்ற பாடலாகவே அமைந்தது. ஆனால், பாண்டார்த்தி பாடல் என்பது இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை கணவனே பாடுவது போல பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

“என் பண்டாரத்தி ஒடம்புக்குள்ள என்ன எழவு பூந்துச்சோ காலரானு வந்த நோய் எமன் கண் எதிர தின்னிச்சோ” என அவர் பாடும் போது அந்த பாடலை வேடிக்கை பார்ப்பவர்களோடு நாமும் சற்றே கண்கலங்கிவிடுவோம். உண்மையில் தேவாவின் குரலில் ஒரு காந்தம் இருக்கிறது. அது கானாவை மட்டுமல்ல சோகத்தையும் நம்முள் அப்படி கடத்துகிறது.

Exit mobile version