
தமிழில் இன்று மட்டும் மன்மத லீலை, இடியட், செல்ஃபி உள்ளிட்ட மூன்று படங்கள் திரைக்கு வந்துள்ளன. இதில் மன்மத லீலை படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் எதுவும் இயங்காததால், படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் உட்பட பல்வேறு படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகின. இதில் ஒரு சில படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது மற்றும் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை மீண்டும் பழையபடி திரும்பியுள்ளதால், படங்கள் நேரடியாக திரையரங்குகளில் வெளியாவது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மத லீலை’ இன்று திரைக்கு வந்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் அட்லட் காமெடி கதையமைப்பில் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்காரணமாகவே படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மிரிச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இடியட்’. ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ என பேய் படங்களை இயக்கி வெற்றி அளித்த இயக்குநர் பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். காமெடி ஹாரர் கதையமைபில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்திலும் அதிகளவிலான படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரே நடிகர் ஜி.வி. பிரகாஷ். அதே பாணியை தற்போதும் அவர் தொடர்ந்து வருகிறார். அதன்படி ஜெயில் படத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இந்தாண்டி திரைக்கு வரும் இரண்டாவது படம் செல்ஃபி. மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயகுநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றதை அடுத்து, செல்ஃபி படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
