பீஸ்ட் படத்துக்காக விடுமுறை கொடுத்த பிரபல நிறுவனங்கள்..!!

beast movie
beast release

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை தங்களுடைய ஊழியர்கள் கண்டு ரசிக்கும் விதத்தில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், பல்வேறு திரைப்பட்ட ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி அன்று படம் வெளியாகும் நாளில், படத்தை காண்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இதற்காக பல்வேறு திரையரங்குகளில் பேனர்கள், கட்-அவுட்டுகள் மற்றும் ஹோர்டிங்க்ஸ் போன்றவற்றை அமைக்கும் பணிகளில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மல்டி-பிளிக்ஸ் திரையரங்குகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள பீஸ்ட் படத்தை, தங்களுடைய ஊழியர்களும் கண்டு ரசிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஏப்ரல் 13-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளன. சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக டிக்கெட்டுகளை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version