தயாரிப்பாளர்கள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் சினிமாவை விட்டு விலகினேன்? நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையை உடைத்த பிரபல கதாநாயகி…

பிரபுதேவா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அள்ளித்தந்த வானம் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கல்யாணி இவர் திடீரென சினிமாவை விட்டு விலகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தற்போது சினிமாவை விட்டுச் சென்றதற்கு காரணத்தினை கூறி பலரையும் மேலும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.இவரது பெயர் பூர்ணிதா. கலைத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக தனது பெயரை கல்யாணி என்று மாற்றிக்கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் நடித்ததோடு சின்ன திரையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இறுதியாக இயல்புயல் படத்தில் நடித்தார் பின்பு சினிமாவை விட்டு வெளியே சென்றார். இதற்கான காரணத்தினை சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.

நான் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய போது பலரும் என் அம்மாவிடம் கால்ஷீட் குறித்து பேசுவார்கள். அவருக்கு தமிழ் தெரியாது அவர்கள் பேசும்போது ஒரு பெரிய ஹீரோ,பெரிய தயாரிப்பாளர்கள் போன்றவர்களின் படங்கள் தனக்கு வாய்ப்பு வந்து இருப்பதாக கூறியவுடன் என் அம்மா மிகவும் சந்தோஷத்தில் அந்த வாய்ப்புகளுக்கு சரி என்று கூறி விடுவார்.

ஆனால், அதன் பின்னர் நான் சினிமாவில் ஒரு சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று என் அம்மாவிடம் கூறினார்கள். ஆரம்பத்தில் அது ஏதாவது கால்ஷீட்டில் உள்ள அட்ஜெஸ்ட்மென்ட் என ஆரம்பத்தில் என் அம்மா நினைத்தார். ஆனால் அதன் பின்னர்தான் அவர்களுக்கு தவறாக பட போனை துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இந்த காரணத்தினால்தான் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறிய கல்யாணி தொலைக்காட்சியில் கூட தனக்கு இது போன்ற தொல்லைகள் இருந்ததாக கூறிபரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Exit mobile version