இங்கிலாந்து படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சர்வதேச விருது..!!

ilayaraja music
ilayaraja

இந்தியர் இயக்கத்தில் இங்கிலாந்து நாட்டில் தயாரான படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் வாசன் என்பவர் இயக்கிய படம் ஏ ப்யூட்டிஃபுல் ப்ரேக்-அப். இங்கிலாந்து நாட்டின் 5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல் என்கிற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கிரிஷ் முத்ரகடா, மட்டில்டா, மார்கோ ராபின்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கான இசையமைப்பு பணிகளை இளையராஜா மேற்கொண்டிருந்தார்.

சமீபத்தில் இப்படம் அமஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு நடுவர் குழு மற்றும் பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவு இப்படத்துக்கு கிடைத்தது. இந்நிலையில் விழாவின் இறுதியில் சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் ஏ ப்யூட்டிஃபுல் ப்ரேக்-அப் படம் விருது வென்றுள்ளது.

இதன்மூலம் இளையராஜாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதேபோல், இந்த விருது வென்றதை படக்குழு நிறுவனமும் வீடியோ மூலம் அறிவித்துள்ளது. இதையடுத்து இளையராஜா ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Exit mobile version