நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து இணையத்தில் வைரலான புதிய தகவல்..!!

nayanthara vignesh shivan marriage
nayanthara vignesh shivan marriage

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அவர்களை குறித்த சுவாராஸ்யமான தகவல்களை இணையத்தில் ரசிகர்கள் பலரும் தேடியது தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்துவுள்ள மகாபலிபுரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள், தற்போது இல்லறத்தில் இணைந்துள்ளதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/VigneshShivN/status/1534852744439160832

இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறித்து தெரிந்துகொள்ள பலரும் இணையத்தை தேடியுள்ளனர். இதையடுத்து நயன்தாராவை விட விக்னேஷ் சிவன் ஏழு மாதங்கள் இளையவர் என்று தெரியவந்துள்ளது.

நயன்தாரா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருமணம் முடிந்தவுடன் அஜித் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். தற்போது இவர்கள் இருவருக்கும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Exit mobile version