உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் டாஸ்க் ஆக இன்று தாங்கள் கடந்து வந்த பாதை, வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாவ்னி தனது கணவர் குறித்து பேசும் போது, நாங்கள் இருவரும் சேர்ந்து பல கனவுகள் கண்டோம். என்னை அவர் ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டார். நான் அவரை மிகவும் காதலித்தேன். அவர் தற்கொலை செய்து கொண்டபோது எனக்கு கோபமாக இருந்தது. நான் வாழ்வில் தனியாக தான் இருக்க வேண்டும் என விதியில் உள்ளது போல என சோகமாக பேசுகிறார்.