நடிகர் பிரபாஸுக்கு அறுவை சிகிச்சை- என்ன ஆச்சு..?

prabhas getting surgery
prabhas

பாகுபலி படங்களில் நடித்து தேசியளவில் பிரபலமான தெலுங்கு சினிமா நடிகர் பிரபாஸுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்பட இந்திய சினிமாவை உலகரங்கில் அடையாளப்படுத்தியது. அதன்மூலம் அந்த படத்தில் நடித்த கதாநாயகன் பிரபாஸும் பிரபலமானார். அவர் அடுத்து நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரியளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் அவருடைய அடுத்த படமான ‘சலார்’ படத்தை பிரபாஸ் பெரிதும் நம்பிக்கையை பெற்றுள்ளது. முன்னதாக சஹோ படத்தில் பிரபாஸ் நடித்த போது, அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது

ஆனால் பட வேலைகள் காரணமாக பிரபாஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது அவர் இறுதியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான சிகிச்சைகள் முடிந்து ஓய்வுக்கு பின் மீண்டும் அவர் படங்களில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version