ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ரஜினியின் ’அண்ணாத்த’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’விஸ்வாசம்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால், தனது அடுத்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பை ரஜினி ’சிறுத்தை’ சிவாவுக்கு கொடுத்துள்ளார். ரஜினியின் 168-வது படமான ‘அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா,கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடர்ந்துவந்த நிலையில் உடல்நலக்குறைவால் ரஜினி ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில்,வரும் நவம்பர் 4 தீபாவளியையொட்டி ’அண்ணாத்த’ படம் வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Exit mobile version