கைவிட்ட விஜய் சேதுபதி.! செம்ம சான்ஸை அள்ளிய ரம்யா கிருஷ்ணன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியை சென்றவாரம் கமல் ஹாசனுக்கு பதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குவதாக இருந்ததாம். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு ஷூட்டிங் இருக்கவே ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார் என்கிற புதிய செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால், கடந்த வார இறுதியில் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது.

அந்த போட்டியில் பலர் இருந்தனர். ரசிகர்கள், விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் என பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், கடைசியில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார்.

உண்மையில், முதன் முதலில் விஜய் சேதுபதியிடம் தான் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். சம்பளம் வரை பேசி முடிக்கப்பட்டும் கடைசி நேரத்தில் விஜய் சேதுபதிக்கு ஷூட்டிங் இருக்கவே அந்த நேரத்தில் கண்டிப்பாக பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், அவரால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரமுடியவில்லை.

அதனால், தான் கடைசி நேரத்தில் ரம்யா கிருஷ்ணனிடம் பேசி அவரை நிகழ்ச்சி தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version