“கண்டா வரச் சொல்லுங்க” ஐயப்பன் பாடலை சுட்ட சந்தோஷ் நாராயணன்…!!

“கண்டா வரச் சொல்லுங்க” ஐயப்பன் பாடலை சுட்ட சந்தோஷ் நாராயணன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச் சொல்லுங்க பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டனர். பாடலை கேட்ட தனுஷ் ரசிகர்களோ, புது யுக இசை என்றால் சந்தோஷ் நாராயணன் தான் என்று பாராட்டினார்கள். மற்றவர்களோ சந்தோஷ் நாராயணனை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“கண்டா வரச் சொல்லுங்க” மணிகண்டனை கண்டா வரச் சொல்லுங்க என்று தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய பக்திப் பாடலை அப்படியே சுட்டு அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டார் சந்தோஷ் நாராயணன். நன்றி தெரிவித்தால் அது காப்பி என்றாகாதோ, கண்டா வரச் சொல்லுங்க அந்த சந்தோஷ் நாராயணனை கண்டா வரச் சொல்லுங்க என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தவரின் டியூனை திருடி பயன்படுத்தினால் யாருக்கும் தெரியாது என்கிற காலம் மலையேறிவிட்டது. இன்றைய நவீன உலகில் அந்த அறிவுத் திருட்டை எளிதில் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார்கள். இசையை திருடிவிட்டார் என்று ஒரு இசையமைப்பாளரை ரசிகர்கள் குறை சொல்வது வழக்கமாகி வருகிறது.

Exit mobile version