சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக கவர்ச்சி ஹீரோயின்…!!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக கவர்ச்சி ஹீரோயின் நடிக்கவுள்ளார்.

பிரமாண்டமாக ஒரு படத்தை எடுங்கள் என்று ஜேடி, ஜெர்ரி ஆகியோரிடம் லெஜண்ட் கூறவே அவர்களும் சரி என்று சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டனர். அண்மையில் லெஜண்ட் ஸ்டண்ட் காட்சியில் ரவுடிகளை தொம்சம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் லெஜண்டுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இருந்து நடிகையை வரவழைத்துள்ளனர். கவர்ச்சிக்கு பெயர் போன ஊர்வசி ரவ்தெலா தான் லெஜண்டுடன் டூயட் பாடப் போகிறார். லெஜண்ட் படம் மூலம் ஊர்வசி தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார். ஒப்பந்தத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு அவர் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். லெஜண்ட் படத்தின் ஷூட்டிங் தற்போது மணாலியில் நடந்து வருகிறது. ஐஐடியில் படித்த மைக்ரோபயாலஜிஸ்டாக நடித்து ஊர்வசி வருகிறாராம்.

ரூ. 200 கோடியில் உருவாகி வரும் அந்த படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். லெஜண்ட் பட வேலை கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே துவங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை பல மாதங்ளாக நிறுத்தி வைத்திருந்தனர். லெஜண்ட் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Exit mobile version