சிம்புவின் ’’ஸ்லிம் சீக்ரெட்டை’’ உடைத்த அவரது தங்கை …

தமிழ் சினிமாவில் இளம்நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது சமீபத்திய படங்கள் எதுவும் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை.

மேலும், அவரது உடல்நிலை குறித்தும் பலரும் விமர்சித்து வந்தனர். இதனால் அவர் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் பெரிதாக மாற்றமில்லை. இந்நிலையில் கொரொனா ஊரடங்கில் வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டார். இதன் விளைவுதான் அவர் நடித்துவரும் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஈஸ்வரன் படமாகும்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு ஸ்லிம் ஆக இருந்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது இதுகுறித்துக் கூறியுள்ள அவரது தங்கை , சிம்புவின் கடுமையான உழைப்பினால் அவரது உடல் எடை குறைந்தது…இது அவரது நோக்கம் மற்றும் லட்சியத்தின் மீதுள்ள ஈடுபாடுஆகும். நான் அவருடன் சில நாட்கள் இருந்தேன்…அவர் கடுமையாக உழைத்தார்….அவரது மன உறுதிக்குத்  தலை வணங்குகிறேன் எனப் புகழ்ந்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த சிம்பு; எனக்கு நல்ல வழிகாட்டியதற்கு நன்றி, அதனால் தான் இந்த உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனது ரசிகர்களுக்கும் நன்றி.. அவர்களின் அன்புதான் எனது உலகம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version