பத்து தல படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் சிம்பு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிப்பு பணிகளை செய்கின்றனர். சமீபத்தில் படத்தின் அறிவிப்பானது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி கொண்டு வருகிறது. தொடர்ந்து வேல்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இதற்கு பிறகு சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்டது. தற்போதைய தகவல்ப்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் அவரது 234 வது படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும், இந்த படமே சிம்புவுக்கு 50வது படம் என்றும் கூட ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிம்பு இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தனது 50வது படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கயிருப்பதால் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இருக்கின்றனர்.
வில்லன் ஆகிறார் சிம்பு!
-
By mukesh

Related Content
தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!
By
daniel
August 31, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!
By
daniel
August 31, 2026
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
“ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் சட்டமன்றம் உள்ளது” — எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026