ஆக்ரா செல்லும் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு!!

டான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் ஆக்ரா புறப்படுகிறார்.

சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை லைகா பட நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தமிழகத்தின் சில பகுதிகளில் நடைபெற்றது, இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங்கிற்காக திரைபடக்குழு ஆக்ரா செல்கிறது. அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பாடல் காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Exit mobile version