’’சூரரைப் போற்று’’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ….தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததால் …ரசிகர்கள் மகிழ்ச்சி

sooraraipottru

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள  சூரரைப் போற்று இந்தியா இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்திற்கு இந்திய விமானப் படை அதிகாரிகள் தடையில்லாச் சான்று கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தேசத்தின் நலன் கருதி சிறுது காலம் தாமதம் ஆகலாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கடிதம் வெளியிட்டார் சூர்யா.

இதையடுத்து அப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆகாசம் என்ற அட்டகாசமான பாடலையும் வெளியிட்டார்.

நேற்று இசையமைப்பாளர்  இப்படத்தின் ஆகாசம் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.

இந்நிலையில் நேற்று இரவு 2டி எண்டெர்டெயின்மென்ட் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் கிடைத்துள்ளது,. விரைவில் புதிய அறிவிப்புகளுக்கு தயாராகுங்கள்..என்று கூறினார்.

எனவே இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகலாம் எனத்தகவல் வெளியாகிறது.

Exit mobile version