பாலா படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா..??

suriya bala movie
Bala

பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வரும் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக வெளியான செய்திகள் குறித்த உண்மை நிலவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கீழ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாலா இயக்கி வரும் இந்த படத்தை நடிகை ஜோதிகா தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.

சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே பிரச்னை உருவானதாகவும் அதனால் பாலா படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் பரவின.

இதுதொடர்பாக பேசிய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர், பாலா இயக்கும் படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. வரும் ஜூன் முதல் அதனுடைய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது.

இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யாவுக்கு இடையில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. விரைவில் இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு, சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் என்று தெரிவித்தார்.

Exit mobile version