சூர்யாவின் 40 –வது படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் குறித்த முக்கிய தகவல்கள் நேற்று வெளியாகி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தனது ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிப்பார். இதனால் அவரது படத்திற்கு பெருமளவில் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழும்.
ஆனால் சமீப காலமான அவர் நடிப்பில் வெளியான காப்பான், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட என்.ஜி.கே போன்ற படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் கதையில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கிய சூர்யா, ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்ட படத்தைக் கொடுக்க முடிவு செய்து , எகனாமிக் பட்ஜெட்டில் மக்களுக்கு விமான சேவையை அறிமுகம் செய்த கோபிநாத்தின் வாழ்க்கை யை மையப்படுத்தி சூரரைப் போற்று என்ற படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இப்படம் பலகட்டங்களுக்குப் பிறகு தடையில்லாச் சான்றிதழைப் பெற்று, வரும் 26 ஆம் தேதி (இன்று ) இப்படத்தின் டிரைலர் ரிலீசாக உள்ளது.,அதனால் ரசிகர்கள் ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் இப்படத்தை தீபாவளிக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக சூர்யாவின் 40 வது படத்தை சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டியராஜ் இயக்கவுள்ளதாகவும் சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.