சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்..!!

சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘சூர்யா 40’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

வாடிவாசல் படத்துக்கு முன்பாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதேவேளையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார் . பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. இந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று முதல் வாடிவாசல் படத்திற்கான இசைப் பணிகளை துவங்குகிறேன்’ என்று ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

Exit mobile version