போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பாலிவுட் திரையுலகில் பல்வேறு நட்சத்திரங்களின் முகத்திரையை கிழித்து வருகிறது. மும்பை, பீகார் காவல்துறையை தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை சுஷாந்த் தற்கொலை தொடர்பாக விசாரித்து வந்த நிலையில், சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இதில் இணைந்தனர்.
தொடர்ந்து, சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி கடந்த 3 நாட்களாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி வந்தார். அப்போது, சுஷாந்த் சிங்கிற்கு தனது தம்பி மூலம் போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகவும், அதைதொடர்ந்தே அவரது தம்பி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, எந்த நேரத்திலும் ரியா கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், 3வது நாளாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.