அவெஞ்சரஸ் பட்டியலில் பிகில்: ரஜினி, அஜித்தை ஓரங்கட்டிய தளபதி விஜய்

கடந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் INDIA TOP GROSSERS பட்டியலில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படம் முதலிடம் பிடித்துள்ளது.

தந்தையின் ஆதரவால் திரை உலகிற்குள் வந்தார் என பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், 25 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பின் காரணமாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருப்பவர் தளபதி விஜய்.

தற்போதைய தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ள விஜய் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் வசூல் வேட்டையை நடத்தி வருகின்றன. இதன் காரணமாகவே இவர் நடிப்பில் உருவாகிம் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

விஜயின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்திற்காக முன்பு அட்லீ இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் பிகில். எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், இப்படம் வசூல் ரீதியாக ரு. 300 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் INDIA TOP GROSSERS 2019 எனும் பட்டியலில் 10வது இடத்தை பிடித்து பெரும் சாதனை செய்துள்ளது.

கடந்த வருடம் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தாலும், TOP GROSSERS பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைபடம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் மட்டுமே. இந்த பட்டியலில் முதலிடத்தில் அவெஞ்சர்ஸ்:எண்ட்கேம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version