வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… தமிழ் ராக்கர்ஸ் to தமிழ் பி******ஸ்

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களுக்கு பயப்படுகிறார்களோ, இல்லையோ. தமிழ் ராக்கர்ஸ்க்கு மிகவும் பயப்படுகின்றனர்.

அதற்கு காரணம் எந்த ஒரு திரைப்படம் புதிதாக வெளியானாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தங்களுடைய பைரசி தளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே தமிழ் ராக்கர்ஸ் சேட்டைகளுக்கு அளவில்லாமல் சென்றுவிட்டது. ஒரு குறும்படம் வெளியானால் கூட அதை தங்களது பைரசி தளத்தில் வெளியிட்டு விடுகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் அடியோடு ஒழிந்து விட்டதாக ஒரு செய்தி வெளியானது. கோர்ட்டுக்கு சென்று அந்த தளத்தை இழுத்து மூடி விட்டதாக பெருமிதம் கொண்டனர்.

ஆனால் ரஜினி ஸ்டைலில், வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்பதற்கு ஏற்ப தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரை தமிழ் பிளாஸ்டர்ஸ் என மாற்றிக்கொண்டு களம் இறங்கியுள்ளனர்.

சும்மா இருந்தவனை சொரிந்த கணக்காக, ஏதோ தியேட்டர் பிரிண்ட் விட்டுக்கொண்டிருந்த தமிழ் ராக்கர்ஸ்சை அப்படியே விட்டுவிடாமல் தற்போது ஹெச்டி பிரிண்ட் வெளியிடும் அளவுக்கு உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது தமில் பிளாஸ்டர்ஸ் என்ற பெயரில் மீண்டும் அந்த பைரசித் தளம் வந்துள்ளதால் கோலிவுட் வட்டாரங்களில் பலருக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறதாம்.

Exit mobile version