சென்னையில் தொடங்கிய தளபதி 66 படப்பிடிப்பு- ஷூட்டிங்கில் இணைந்தார் ராஷ்மிகா..!!

rashmika mandana
thalapathy 66 crew

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 66-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் துவங்கியுள்ளது. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, செல்வராகவன், ரெட்டின் கிங்ஸ்லி மற்றும் சதீஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தோழா படத்தை இயக்கிய வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு தளபதி 66 என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. அதை தொடர்ந்து ஹைதராபாத், ஆந்திராவில் படப்பிடிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இந்த படம் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக நடிக்கிறார் விஜய். இந்த படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version