ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பாரம்பரியமிக்க சத்யஜோதி பிலிம்ஸ் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது. அன்பறிவு என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாக நடிக்கிறார். இசையமைப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நாயகன் என பல்வேறு துறைகளில் ஹிப்ஹாப் தமிழா முத்திரைப் பதித்தவர்.

ஹிப்ஹாப் தமிழா நடிக்கும், இயக்கும் படங்களை சுந்தர் சி தான் தயாரிப்பார் இந்தமுறை பாரம்பரியமிக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த புதிய படத்துக்கு அன்பறிவு என பெயர் வைத்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா நாயகனாக நடிப்பதுடன், படத்தின் கதையை எழுதி, இசையமைக்கவும் செய்கிறார்.

அஸ்வின் ராம் படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம், எடிட்டிங் பிரதீப் ராகவ். கோவில் பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக், இதுவொரு கிராமத்துப் படமாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

Exit mobile version