‘வலிமை’ வெளியீடு ஒத்தி வைப்பு?

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வெளியீடு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.

’நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச். வினோத்துடன் அஜித் இணையும் படம் ‘வலிமை’. கொரோனா காலம் என்பதால், படப்பிடிப்பு பாதியில் நின்று பிறகு மீண்டும் தொடங்கியது.

இதன் பிறகு படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு ட்ரெண்டாக்கி வந்தனர். இந்த நிலையில், இந்த வருடம் அஜித்தின் பிறந்தநாளான மே1 அன்று படம் வெளியாகலாம் என சொல்லப்பட்டது.

READ MORE- ‘கே.ஜி.எஃப்2’ டீசர் அவுட்!

மேலும் தற்போது, தியேட்டர்களின் 100 சதவீத இருக்கை விஷயத்தில் பல தரப்புகளிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருவதால், ‘வலிமை’ படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் எனவும் தகவல் வெளியானது. ஆனால், அஜித் தரப்பு இந்த தகவல் பொய்யானது என மறுத்துள்ளது.

Exit mobile version