‘மாஸ்டர்’ படம் சாதனை : 100 கோடி வசூல்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, நடித்து வெளியான படம் ‘மாஸ்டர்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தெலுங்கில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியான இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடியே ‘மாஸ்டர்’ வெளியாகியுள்ளது. தற்போது மாஸ்டர் படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, ‘மாஸ்டர்’ படக்குழுவினரைப் பாராட்டி சினிமார்க் மற்றும் ஏ.எம்.சி திரையரங்க நிர்வாகம் இ-மெயில் அனுப்பியுள்ளனர். இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பாக எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறியிருப்பதாவது: ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று அவர் கூறியிருந்தார்.

Read more – வருங்கால கணவருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா !

உலக அளவில், வெற்றிகரமாக, சுமார் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் படம் வெளியாகி மூன்றே நாட்கள் ஆன நிலையில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது. தளபதி விஜய்யின், துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில், உள்ளிட்ட படங்களும் 100கோடி வசூலை ஈட்டித் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version