‘அசுரன்’ படத்திற்கு தேசிய விருது…!!

‘அசுரன்’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், சிறந்த தமிழ்ப் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் ’அசுரன்’ திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விமர்சன ரிதியில் மட்டுமின்றி வர்த்தக ரீதியிலும் மிகுந்த கவனத்துக்குரிய படமான ‘அசுரன்’, பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். சாதி ஆதிக்கத்தின் அவலச் சூழலையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் இப்படம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் மகிழ்ச்சியில் அசுரன் பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version