சுல்தான் படத்தின் ட்ரெய்லர் “நூறு தல ராவணன்” வசனத்துடன் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரங்களில் லால், நெப்போலியன், சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியிருக்கும் ட்ரெய்லரை நடுவில் நடிகை ராஷ்மிகா மந்தனா காதல் காட்சிகளால் சிறிது ஆசுவாசப்படுத்துகிறார். சுல்தான் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.