கர்ணன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விருப்பம் என இளம் ஹீரோ தெரிவித்துள்ளார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் திரையரங்குகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியானது கர்ணன் திரைப்படம். சந்தேஷ் நாராயணனின் உயிரோட்டமான இசையும், தனுஷின் பக்குவமான நடிப்பும், மாரி செல்வராஜின் அற்புதமான திரைக் கதையும், தேனி ஈஸ்வரின் அழகியலும், வாழ்வியலும் கொண்ட ஒளிப்பதிவும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்தது.
கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க பிரபல நடிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆந்திர தேசத்தில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. அவர் வேறு யாருமல்ல, தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் தான். தமிழ் திரைப்படமான ராட்சாசனின் ரீமேக்கில் ஏற்கனவே நடித்து வெற்றி வாகை சூடியவர் சாய் ஸ்ரீனிவாஸ். இவர் தற்போது தெலுங்கில் ஹிட் அடித்த சத்ரபதி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.
பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை என அனைத்தும் பிடித்து போக, அவரே கர்ணன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெலுங்கு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கர்ணன் திரைப்படம் ஒடிடி தளமான அமேசான் பிரைமில் மே 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு திரைப்படம் 30 நாள்கள் தியேட்டரில் வெளியான பின்பு ஒடிடியில் வெளிடலாம்