மன்மத லீலை படத்திற்கு சிக்கல்: கடைசி நேரத்தில் ஏற்பட்ட ட்விஸ்டு..!!

manmatha leelai movie
manmatha leelai movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் ‘மன்மதலீலை’ திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனமதலீலை’. இந்த படத்தில் அசோக் செல்வன், பிரேம்ஜி அமரன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம் முன்னதாக ‘இரண்டாம் குத்து’ படத்தை தயாரித்திருந்தது. அந்த படத்தை விநியோகம் செய்ததில் ரூ. 2 கோடி தொகையை பாக்கிவைத்துவிட்டதாக, பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரூ. 30 லட்சம் தொகையை 4 வாரங்களில் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வங்கியில் செலுத்த வேண்டும் என நீதிபதி எம். சுந்தர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் மன்மத லீலை திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

இவ்விவகாரத்தில் ’குருதி ஆட்டம்’ படமும் சமரச தீர்வு ஏற்பட்டு விரைவில் வெளிவருகிறது. இதன் காரணமாக படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version