விஜய்யை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் அஜீத்!!!

இந்தியா முழுவதும் பல மொழி படங்கள் வருகின்றன ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த ஊர் ரசிகர்களுக்கு, குறிப்பிட்ட நடிகர், நடிகைகளை பிடிக்கும்.இதையே இணையதளம் ஒன்று ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்கள் மிகவும் விரும்பும் நட்சத்திரங்கள் யார் என்ற ஒரு கருத்து கணிப்பை நடத்தி வருகிறது.

அதில் தமிழில் 2020 ஆம் ஆண்டின் விருப்பப்படும் நடிகர் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இணையதளம் மூலமாக நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 25 இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியலை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தை நடிகர் அஜித் பிடித்துள்ளார். அஜித் இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு நான்காவது இடத்திலும், 2018 ஆம் ஆண்டு மூன்றாவது பிடித்துள்ளார். 2020-ல் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். இதன்மூலம் அவரது வளர்ச்சி உயர்ந்து வருவதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். நடிகர் விஜய் இந்தாண்டு எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். 2019-ல் 3வது இடத்திலும் 2018 ஆம் ஆண்டு 5 வது இடத்திலும் இருந்த விஜய் மேலும் பின்தங்கியுள்ளார்.

Exit mobile version