விஜய்-65 படம்…. ஏ.ஆர். முருகதாஸின் ஸ்கிரிப்ட் ரிஜக்ட் …. விஜய் எடுத்த அதிரடி முடிவு

விஜய் -65 படத்தில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் கதைப் பிடிக்கவில்லை என்பதால் அதை நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் மாஸ்டர். இப்படத்திற்கு உலக அளவில் எதிர்ப்பார்பு எகிறியுள்ளது. லோகேஷ் கனகராஜ் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகியுள்ளார்.

இந்நிலையில் , விஜய்-65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது.

இந்நிலையில் இந்த நிலையில் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் என்று மூன்று ஹிட் ஃபிலிம்களைக் கொடுத்துள்ளதால் இவர்கள் இணையும் நான்காவது படத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் 8 மாதங்களாக ஸ்கிரிப்ட் வேலை செய்து வந்த ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்கிரிப் எதுவும் விஜய்க்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விஜய் 65 படத்தை வேறு யாராவது இயக்குவார்களா? இல்லை அவரே இயக்குவாரா என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை  பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் திருச்சி, மதுரை, குமரி மாவட்ட மக்க்ள் இயக்க நிர்வாகிகளுடனும் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.அதில் தொடர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்யுங்கள்…. என் உதவிகள் வந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

Exit mobile version