விஜய்யின் பிகில் படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி டுவீட் பதிவிட்டுள்ளார். #1YrOfMegaBlockbusterBigil
பொதுவாக தமிழ்சினிமாவில் வருடம்தோறும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் தயாராகிறது. இதில் பல புதுமுக தயாரிப்பாளர்களும், பாரம்பரிய தயாரிப்பு நிறுவங்களும் ஏற்கனவே இத்துறையில் ஆழங்கால் ஊன்றியவர்களுடன் வாரிசு சார்ந்தவர்களும் இயங்கி வந்தாலும் புதுமுகங்களைவிட வாரிசு சார்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் விஜய் அவரது அப்பாவின் இயக்கத்தில் ஆரம்பகாலப் படங்களில் நடித்து வந்தாலும்கூட ஒரு பத்து படங்களுக்குப் பின் தனது வெற்றியை உறுதி செய்தார்.
இப்போது அவரை நம்பி பல கோடிகள் வரை முதலீடு செய்து அதைவிட அதிகளவில் லாபம் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.
அந்த வகையில் , அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில், விஜய் – நயன்தாரா நடிப்பில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையே தெறிக்கவிட்ட படம் பிகில். மூன்றாவது முறையாக அட்லி விஜய்யுடன் இணைந்ததால் அனைத்துத் தரப்பிலும் கொண்டாடப்பட்டது.
இப்படம் வெளியாகி இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. எனவே இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வெற்றிக்கான காரணத்தை நினைக்கும்போது இனிப்பான ஞாபகமாக உள்ளது. இந்த நாள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாள்….நடிகர், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், நயன் தாரா, அட்லி உள்ளிட்ட அனைவருடனும் நான் எப்பவும் துணைநிற்பேன்… என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் ரசிகர்களும் இதை ஏற்கனவே கொண்டாடத் தொடங்கிவிட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சண்முகா தியேட்டரில் மீண்டும் பிகில் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் மாஸ்டர் வெளிவரும்வரை ரசிகர்கள் பிகிலை மீண்டும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். ஏனென்றால் விஜய்யின் எத்தனையோ படங்களில் மீண்டும் பார்க்கத்தூண்டும் படங்களில் பிகிலும் ஒன்று என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அத்துடன் டுவிட்டரில் ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.
பிகில் படத்தில் எத்தனையோ விமர்சனங்கள் எழுந்ததாலும் இப்படத்தின் இயக்குநர் அட்லி மீது பல படங்களைக் காப்பி அடித்தததாக விமர்சனங்கள் கூறப்பட்டாலும் அவரது இயக்கத்தை பலரும் பாராட்டினர்.
குறிப்பாக விஜய் –நயன்தாரா வில்லு படத்திற்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்படத்தில் இணைந்தனவர் என்பது இப்படத்தின் வெற்றியின் காரணத்தில் ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. #1YrOfMegaBlockbusterBigil #1YrOfMegaBlockbusterBigil #Master #Bigil