போதைப் பொருள் விவகாரம் : நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு சம்மன் !

போதைப் பொருள் விவகாரத்தில்  நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு மீண்டும் சம்மன்.

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது வழக்கை விசாரித்து வந்ததில் தற்போது இவ்வழக்கு போதைப் பொருள் வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியைத்தொடர்ந்து, தீபிகா படுகோனே, சாரா அலிகான்,  உள்ளிட்ட நடிகைகள் இவ்வழக்கில்  போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோ கன்னட திரையுலகினருக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில்  முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில்,சமீபத்தில் நடிகர் விவேக் ஓபராயின் மைந்துனரானஆதித்யாவை  போலீஸார் தேடி வந்ததை அடுத்து, அவரது வீட்டினுள் போலிஸார் சோதனை நடத்தினர்.

பின்னர் நடிகர் விவேக் ஓபராயின் மனைவவி பிரியங்கா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகதால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version