ஆஸ்கர் அகெடமி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் ராஜினாமா..!!

will smith oscar
will smith slaps

ஆஸ்கர் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வரும் அகெடமி ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அமைப்பின் உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளது ஹாலிவுட் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டுக்கான 94-வது முறையாக ஆஸ்கர் விருதுகள் விழா கடந்த திங்கள்கிழமை அன்று லாஸ் வேகாஸில் நடைபெற்றது. அப்போது சிறந்த ஆவணப்படத்துக்கான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் கிறிஸ் ராக் மேடையில் தோன்றினார்.

அப்போது விளையாட்டாக பலரையும் பகடி செய்து பேசினார். பார்வையாளர்கள் இருகையில் இருந்த நடிகை ஜெடா பிங்கட் ஸ்மித்தையும் நகைச்சுவையாக குறிப்பிட்டு பேசினார். இதனால் கோபமடைந்த அவருடைய கணவரும் நடிகருமான வில் ஸ்மித், மேடையேறி வந்து கிறிஸ் ராக்கை கண்ணத்தில் அறைந்தார்.

இது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேவிழாவில் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அப்போது மேடையில் பேசுகையில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், வில் ஸ்மித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஹாலிவுட் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version