மீண்டும் ஷாரூக்கானுடன் நடிக்கும் யோகி பாபு..!!

Yogi babu

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கானுடன் மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடித்து வருவதை யோகி பாபு உறுதி செய்துள்ளார்.

பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ இந்தியில் தயாராகி வரும் லயன் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா, ப்ரியாமணி மற்றும் சானியா மல்ஹோத்ரா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்த தகவலை சமூகவலைதள பதிவின் மூலம் அவர் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் யோகி பாபு இரண்டாவது முறையாக இந்திப் படத்தில் நடிக்கிறார்.

Exit mobile version