இந்த பொழப்புக்கு.. யோகிபாபுவை விடாமல் விரட்டும் சர்ச்சை…!

yogi babu

yogi babu

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, எம்எஸ் பாஸ்கர், துரை, கோவை சரளா, மாளவிகா மேனன், ரேகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘பேய் மாமா’. பங்களாவில் பேய்கள் இருப்பதால் அதை விற்க முடியாமல் போய்கிறது, இந்த சமயத்தில் பேய்களை விரட்ட முயலும் வில்லன் கும்பலுக்கும் யோகிபாபு டீமுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் கதை பேய் மாமா திரைப்படம்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதே சமயத்தில் யோகிபாபுவை விடாமல் சர்ச்சை ஒன்றும் விரட்டி வருகிறது. இதற்கு முன்னதாக ரிலீஸ் தேதியோடு பேய்மாமா பட போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டர் விக்கி கௌஷல் நடித்த பூத் இந்தி படத்தின் போஸ்டரை அப்படியே காப்பியடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் யோகிபாபுவை கலாய்க்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பட ரிலீஸை முன்னிட்டு பேப்பரில் பேய் மாமா போஸ்டர் வெளியாகியுள்ளது. அதுவும் பிரபல ஆங்கில பட போஸ்டரின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘யார் கிட்ட எங்க கிட்டயேவா? கண்டுபிடிச்சிட்டோம் இல்ல’ என யோகிபாபுவை பங்கமாக கலாய்ந்து இரண்டு போஸ்டர்களையும் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். சில நெட்டிசன்களோ இப்படி அட்ட காப்பி அடிக்கிற பொழப்பு தேவையா? என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த போஸ்டர்…

Exit mobile version