தவறுகள் குற்றங்கள் அல்ல-கே.வள்ளிகாந்த்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 108 தவறுகள் குற்றங்கள் அல்ல-கே.வள்ளிகாந்த்

“ஹேய்…மக்கு மது,சாம்பிராணி நீலாம் சுத்த Waste. படிக்க புடிக்கலைனா வீட்லையே இருந்து வீட்டு வேலை எல்லாத்தையும் கத்துக்கிட்டு எவனையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போக வேண்டியதுதானே,பாரு…Boys Batch  ராஜ் எப்படி படிக்கறானு, அவனப் பாத்தாவது உருப்படற வழியப் பாரு..”

இப்படி ராஜ்யை Compare பண்ணி, Compare பண்ணி  Daily  என்னை திட்டாம இருந்ததே இல்ல என்  10 th Tution Master கந்தசாமி சார். எப்பப் பாத்தாலும் மூச்சுக்கு 300 தடவை ராஜ்…ராஜ்னு அவன் புராணமேதான் பாடுவார். அப்படி என்ன இந்த ராஜ் பெரிய———–ஆ?  அவன எப்படியாவது பாக்கணும்னு எனக்கு ஒரு ஆச…அன்னைக்கு Tution முடிஞ்சு எல்லாரும் கெளம்பிட்டாங்க.நான் மட்டும் Next Boys Batchங்கறதால இன்னைக்கு எப்படியும் ராஜை பாத்தேத் தீரணும்னு  அவனுக்காக Wait பண்ணேன்..ஒவ்வொரு பையனா உள்ள வர்றாங்க…இவ்ளோ பேர்ல யாரு ராஜ் ஆ இருக்கும்? நான் நெனச்சிக்கிட்டு இருக்கும் போதே “டேய் ராஜ்…ஒரு நிமிஷம் நில்லுடா” திரும்பிப் பாத்தா அப்டியே அலைபாயுதே மாதவன் மாறி சாக்லேட் boyஆ ராஜ் தல முடியக் கோதிக்கிட்டு நிக்கறான்.

அவ்ளோதான் விழுந்துட்டேன்,அன்னையில இருந்து Daily அவனப் பாக்காம  எனக்குத் தூக்கம் வராது. அவனப் பாக்கணுங்கறதுக்காகவே கந்தசாமி சார்கிட்ட Doubt கேக்கறேங்கற பேர்ல  அவன் வர வரைக்கும் உட்கார்ந்துகிட்டே இருப்பேன். இப்படியே ஒரு மாசம் போச்சு…ஒரு நாள் Tuitionக்கு வெளியே நான் அவனுக்காக Wait பண்ணிகிட்டு இருக்கேன்.

ராஜ் நேரா என்கிட்ட வந்தான். அவன் பக்கத்துல வந்ததுமே எனக்கு Heart Beat லாம் துடிக்க ஆரம்பிச்சுடுச்சி..ஒடம்பு புள்ளா வேர்த்து, விறு விறுத்து நிக்கறேன்,அவன் என் பக்கத்துல வந்து   “உன் பேரு மது…அப்பா பேரு அடைக்கலம்  Bank Manager, அம்மா ராஜம் -House Wife, ஒரு தம்பி  6th படிக்கறான்.நீ வீட்டுக்கு செல்ல பொண்ணு, உனக்கு Blue Color ரொம்ப புடிக்கும், ஜீவா படம்னா ரொம்ப, ரொம்ப புடிக்கும்…” அப்டினு பட படனு என்னைப் பத்தி சொல்லி,  சிட்டிகைப் போட்டவன் ” இதப்பாரு..மது.. “நீ என்ன ஒரு மாசமாதான்  Follow-up பண்ற நான் உன்ன 1 year ah  follow பண்றேன்..” yes உன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும் கந்தசாமி சார் அடிக்கடி சொல்வார் “என் Lifeஎலையே மது  மாறி ஒரு மக்குப் பொண்ணப் பாத்ததே இல்லனு…..யாரு அந்த மக்கு பொண்ணுனு பாத்தப்ப தான் நீ. பாத்த பத்தாவது Second லையே உன் மேல எனக்கு Love பத்திக்கிச்சு”I LOVE U SO MUCH” னு அவன் சொன்ன அந்த நிமிஷம் வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிக்கணும் போல இருந்தது..அந்த மாறி ஒரு சந்தோஷம், ஒரு Feel இதுவரைக்கும் என் Life ல நான் அனுபவிச்சதே இல்ல, அதுக்கப்புறம் வழக்கம் போல எல்லா Lovers மாறி, ஊர்ல இருக்கற எல்லா கோவில், குளம், Friend ங்க வீடு, அங்க, இங்கனு 2 வருசம் செம Fast ஆ ஓடிடுச்சி பாத்தா 12 th public exam…நாளைக்கு நாம ராஜியோட Wife ஆகப்போறோம் அவனுக்கு ஏத்தா மாறி நாமளும் நல்ல Status ல இருக்கணும்னு விழுந்து, விழுந்து படிச்சேன் எப்டியோ முட்டி, மோதி 12 th ல 1000 mark  .”I am very…i am very happy ”  னு கவுண்டமணி style ல கத்திக்கிட்டு இருக்கேன்,TV லப் பாத்தா நம்ம Raj State Second னு பேட்டிக் கொடுத்துகிட்டு இருக்கான்.(Love அது,இது னு சுத்தனாலும் பய படிப்புல பயங்கரத் தெளிவு.)

ராஜ்க்கு  MBBS Seat கெடச்சும் எனக்காக நான் சேர்ந்த அதே சாய்ராம் Engineering College ல அவனும் சேர்ந்து படிச்சான்..Friends ங்கலாம் “டேய்..என்னடா இது ..” னு அவனப் பாத்துக் கேட்டதுக்கு அவன் சொன்னது,”வாழ்க்கையில ஒரு தரம் தான் College படிக்கறோம்..அது என் மதுக் கூட சேந்துப் படிக்கணும்னு ஆசப்படறேன்…” அவன் சொன்னப்ப அவனக் அப்டியே கட்டிப் , புடிச்சி “————-” (அட ஆமாங்க Censor Cut). இப்டியும் ஒருத்தன் நம்மள Love பண்ணுவானா..?னு ஏகப்பட்ட சந்தோஷம் எனக்கு. 4 வருசம் Daily Chating, அப்பப்ப Dating, Workshop, Seminors, IV, Inplant Training, Culturals, அப்டி, இப்டினு எங்கப் போனாலும் ரெண்டுப் பேரும் Pair ஆதான் போவோம்…”ஊர் கண்ணு, உலகத்து கண்ணு, நல்ல கண்ணு, நொள்ளக் கண்ணு..எல்லார்க் கண்ணும் பட்டுடுச்சு.எங்க Combination ஆப் பாத்து, அவங்க வயித்தெரிச்சலோ , என்னவோ தெரியல எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு  “நீப் படிச்சது எல்லாம் போதும்..”னு  என்னை காஞ்சிபுரத்துல இருக்கற எங்க மாமா வீட்ல கொண்டுப் போய் மறைச்சி வெச்சுட்டாங்க…நானும், ராஜ்யும் ஒருத்தர ஒருத்தர் பாக்க முடியாதபடி, பேச முடியாதபடி, எல்லாத்தையும்  Block பண்ணிட்டாரு எங்க அப்பா. அப்டியும் என் ராஜ் நான் இருக்கற ஏரியாவக் கண்டுபிடிச்சி வீடு, வீடா நொழஞ்சி தண்ணிக் குடிக்க கேக்கறேங்கறப் பேர்ல எங்க மாமா வீட்ட கண்டுபுடிச்சுட்டுட்டான்.(Weldon Raj)

Final Semester சமயம் நாங்க ரெண்டுப் பேரும் “ஓடிப்போகலாம்னு முடிவு பண்ணி…” வீட்டு சுவறேறிக் குதிக்கறோம் …பாத்தா அப்பா, இந்த Level க்கு வந்தாச்சா..? இனிமே உங்கள ஒண்ணுமே பண்ண முடியாது..சரி..” ஒரு நல்ல வேலைக்கு போயிட்டு நல்லா சம்பாதிச்சுட்டு  2 years கழிச்சு வந்து நாங்க ரெண்டுப் பேரும் இன்னும் Love பண்றோம்னு வந்து சொல்லுங்க அப்ப  உங்க ரெண்டுப் பேருக்கும் நானே  கல்யாணம் பண்ணி வெக்கறேன்  இது சத்தியம்…னு அவர் சொன்னதக் கேட்டு  என் கையப் புடிச்சியிருந்த ராஜ் விட்டுட்டு..”OK..UNCLE…SURE…” அப்பா பதிலுக்குக் கூடக் காத்திருக்காம கெளம்பிட்டான்.

அந்த சம்பவத்துக்கு பிறகு  எப்பவாது தான் அவன் என்ன பாக்க வருவான்…வாரத்துக்கு ஒரு நாள் Call பண்ணி பேசுவான்… Course முடிஞ்சு 6 மாசத்துல ஒரு MNC ல 30 ஆயிரம் ரூபா சம்பளத்துல  அவனுக்கு  Super ஆன Job bangalore ல கெடைக்க , எனக்கும் சென்னையில ஒரு சின்ன Company ல வேலைக் கெடைக்க ரெண்டு பேருமே அவங்க அவங்க Carrier ல Concentrate பண்ண ஆரம்பிச்சிட்டோம்…வாரத்துக்கு ஒரு போன் Call அப்டிங்கறது மாசத்துக்கு ஓண்ணா மாறிடுச்சு..நான் Free ah இருக்கும் போது அவன் Busy ah இருப்பான் அவன் Busy ah இருக்கும் போது நான் Free ah இருப்பேன்…இப்டியே நாங்க  தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிட்டோம்.

அப்பதான் என் Colleque சிவாவோட Friendship எனக்கு கெடச்சது..First , FIrst  அவன் அவனோட Love Failure Matter ஆ சொல்லிதான் பேச ஆரம்பிச்சான்..அவனுக்கு ஆறுதல் சொல்ல பேச ஆரம்பிச்ச நான் என்னையறியாமலே அவன் மேல ஒரு  Crush வர ஆரம்பிச்சிட்டது..(இதப்படிக்கும் போது ச்சா…இவலாம் ஒரு பொண்ணா? அப்டினு உங்களுக்கெல்லாம் தோணும் But இதுதான் உண்மை…இத சொல்ல எனக்கே நாக் கூசுது).அவன்கூட பேசாம என்னால இருக்கவே முடியல…எப்பப் பாத்தாலும் சிவா…சிவா..னு அவன் சட்டையப் புடிச்சுகிட்டே சென்னை Full ah சுத்திக்கிட்டு இருந்தேன்,அப்பப்ப ராஜ் ஞாபம் வரும்,But raj யை விட சிவா என் Life Partner ஆ வந்தா என் Life நல்லா இருக்கும் னு என் உள் மனசு சொல்லிகிட்டே இருந்தது. ஒரு நாள் ராஜ் என்னைப் பாக்கறதுக்காகவே  சென்னை வந்தான் நானும் , அவனும் Velachery Dimero Restaurent லதான் Meet பண்ணோம்..கிட்டத்தட்ட  ஒரு One Hour ரெண்டுப் பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டே உட்கார்ந்துகிட்டு இருக்கோம் (அவன் என்ன Love mood ல பக்கறான். நான் அவனக் குற்ற உணர்வுல பாக்குறேன்) எதுவுமே பேசல. கொஞ்ச நேரம் கழிச்சி தயங்கிகிட்டே நான் பேச ஆரம்பிக்கறேன். அதுக்குள்ள ராஜ் “மது…நம்ம கல்யாணத்த எப்ப வெச்சுக்கலாம் அப்பா சொன்ன ரெண்டு வருசம் நாளையோட முடியுது,எனக்கு Last weekதான் Increment போட்டாங்க…இப்ப 50000 salary…இன்னும் 6 Month ல US அனுப்பறேனு சொல்லியிருக்காங்க…” அவன் பேசிக்கிட்டு இருக்கும் போதே “ராஜ் …என்ன மன்னிச்சுடுடா…..நான் தப்பு பண்ணிட்டேன்…”னு வாய்விட்டு அழ ஆரம்பிச்சிட்டுட்டேன். ” என்னடி..சொல்ற ..?” அவன் கேக்க, கேக்க என்னால எதுவுமே பேச முடியல” இல்லடா,என் Colleague  Siva அப்டிங்கறவனை Love பண்றேன்..அவனதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுது…இது தப்பா? சரியா?னு எனக்கு தெரியல….நான்… என்ன பண்ணட்டும்…நான் கேட்ட அடுத்த Second ராஜ்  செமக் கடுப்பாகி Tableஎயை “Shut..” nu ஓங்கி ஒரு தட்டு தட்டிட்டு, விருட்டுனு அங்க இருந்து கெளம்பிட்டான்.சுத்தியிருந்தவங்க எல்லாம் வேடிக்கப் பாத்தாங்க,எனக்கு என்னப் பண்றதுனே தெரியல,ஒரு பக்கம் ராஜை ஏமாத்திட்டமோனு குற்ற உணர்ச்சி…இன்னொரு பக்கம் சிவாவ Miss பண்ணிடக் கூடாதுனு ஹா..பையத்தியமே புடிக்கறா மாறி இருந்தது..”ஏன் எனக்கு மட்டும் இப்டிலாம் நடக்கணும்.நான் என்ன பாவம் பண்ணன்.” தலையில அடிச்சுகிட்டு Room ல அழுதுகிட்டு இருக்கேன்.

 ராஜ்கிட்ட இருந்து Call.. “மது…Sorry Resot ல அப்டி Behave பண்ணதுக்கு,உன் மனசு சொல்றத கேளு,Dont worry உனக்கு சிவாதான் Correct,Best Wishes” னு சொல்லி பதிலுக்குக் கூட காத்திருக்காம போனை Cut பண்ணிட்டான்.அதுக்கப்புறம் அவனக் Contact பண்ண  நானும் எவ்ளவோ Try பண்ணேன்.அவன் Mobile Number லாம் மாத்திட்டானாம்.எங்க இருக்கானு என் Friends யாருக்குமே தெரியல,அப்புறம் ஒரு one year ல சில, பல பிரச்சனைகளோட.எனக்கும் சிவாவுக்கும் Parents ஆசிர்வாதத்தோட கல்யாணம் ஆகி, இதோ ரீத்தீஷ் னு ரெண்டு வயசுல ஒரு பையன்.ரொம்ப Peaceful ah போகுது Life. Last May Summerக்கு  US ல இருக்கற சிவா Sister வீட்டுக்கு  போயிருந்தோம்,அங்க ஒரு Restaurent ல எல்லாரும் Dinner சாப்பிட்டுகிட்டு இருக்கோம்,”Sir,Sorry…Sorry…”னு waiter கெஞ்சிகிட்டு இருக்கான் “OK..OK….NOP…”னு எங்கையோ கேட்ட வாய்ஸ் திரும்பிப் பாத்தா,Yes…French beard  வெச்சுக்கிட்டு Raj. என்னப் பாத்ததும் Smile பண்ணி “Hai I am Raj..மது SchoolMate ” னு சிவாகிட்ட வந்து தானாவே அவன் Introduce பண்ணிக்கிட்டான்..இத்தன வருசத்துக்குப்புறமும் அதே Gentle….Such a wonderful Man,அத, இத னு எல்லாத்தப் பத்தியும் ரொம்ப நேரம்  பேசி அவனும்  எங்கக் கூடவே Dinner சாப்பிட்டான்…வீட்டுக்கு வந்தப் பிறகுதான் அவன் Family ah பத்தி கேக்கவே இல்லையேனு அவனுக்கு Call பண்ணா…” அவன் சொன்னது இதுதான் , “என் Life ல மதுனு ஒரு  பொண்ணுக்கு மட்டும் தான் இடம்..அவ அந்த எடத்த வேணாம்னு சொல்லிட்டா…அதுக்காக அந்த எடத்த வேற யாருக்கும் கொடுக்கணும்னு எனக்கு தோணல…உன் மனசுக்கு பட்டத நீ செஞ்ச…என் மனசுக்குப் பட்டத நான்  செய்யறன்..நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் எனக்கு இந்த Life ரொம்ப புடிச்சிருக்கு, Pls….Dont disturb me” அவன் சொல்லி போன வெச்சப்ப நாம எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டோம் னு என் மனசு உறுத்துச்சு…நான் சொல்றது Correct தானே..என்ன மாறி ஒரு பொண்ணு இருப்பாளா? நான் பண்ணது 100% தப்புதான். ஒரு பையனோட வாழ்க்கையே  என்னால போச்சே…என்று என்  Facebook தோழி மது Chating ல் என்னிடம் கண்கலங்கி கேட்டப்பொழுது, நான் அவளிடம் சொன்னது “தவறுகள் குற்றங்கள் அல்ல…” Dont Worry be happy “.

******


	
Exit mobile version