அதுவும் ஒரு சராசரி நாலே-மோனிகாசங்கர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 123 அதுவும் ஒரு சராசரி நாலே-மோனிகாசங்கர்

நாள் 10 .11 .2014 திங்கட்கிழமை என்றும் போல் அன்றும் என் தொலைபேசிக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை ஆனால் அதை எப்பொழுதும் போல் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…..

நான் பள்ளி முடித்து கல்லூரி சென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன என் பள்ளி நண்பர்கள் என்னை மறந்து விட்டனர் என் கல்லூரியில் என்னை அறிந்தவர் அதிகம் இல்லை நான் வாழும் வாழ்க்கை தனிமையாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணி இருப்பீர்கள் இல்லை இது நிம்மதியாக இருக்கிறது,

காலை எழுந்ததுமே பிள்ளைகளை பள்ளிக்குக் கிளம்ப சொல்லி கூப்பாடு போடும் கமலா அம்மா, மளிகை சாமானில் ஏதோ ஒரு பருப்பு விட்டுப் போனதுக்கு பேயாட்டம் ஆடும் கஸ்தூரி அக்கா, பிள்ளைகளை சீக்கிரம் ஏற சொல்லி மேளம் அடிக்கும் ஆட்டோ அண்ணா, மளிகை கடை தாத்தாவுக்கு தலைவலியே வந்துவிட்டது பாசிப்பருப்பா பேனா பென்சிலா என்று இப்படி மின்சார ரயிலில் பயணிக்கும் மனிதர்களுக்கு இடையே நான் மிதிவண்டியில் பயணிக்க விரும்பினேன்!!!
சிரிக்காதீர் எண்ணி நகைக்க ஒன்னும் இல்லை நேற்றைய சட்னியை நாளைய தோசைக்கு எடுத்து வைப்பது இன்றைய பசிக்கு பட்டினி போடுவது போல அப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ விரும்பவில்லை….

அன்று காலை சிறிது தாமதமாக கிளம்பியதால் கல்லூரி பேருந்தை விட்டு விட்டேன் இப்பொழுது அரசாங்க பேருந்தில் தான் செல்ல வேண்டும் அரை மணி நேர காத்திருப்பின் ஒரே பேருந்தில் இத்தனை பேர் பயணிக்க முடியுமா என்ற மெய்சிலிர்ப்பில், அடித்துப் பிடித்து எப்படியோ பேருந்தில் ஏறிவிட்டேன்

பள்ளியில் தமிழ் புத்தகத்தில் பேருந்து விதிமுறைகள் என்று ஒரு பட்டியல் இருக்கும்
1.பேருந்து படியில் நிக்கக்கூடாது:
படியில் நிற்பவர்கள் கூட ஏதோ பத்திரமாக இருப்பார்கள் ஆனால் கம்பியில் தொங்குபவரை சாகசவாதி என்று தான் சொல்ல வேண்டும்
2. வயதில் மூத்தவருக்கு உட்கார இடம் கொடு:
அவரே நின்று கொண்டு இருப்பவரின் மூட்டைகளை மடியில் சுமக்கிறார் இதில் இந்த விதிமுறை மிக்க அவசியம் …

விதிமுறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் இங்கே ஒரு போர்வீரரையும், சேனாதிபதியையும் மறந்து விட்டோம் ஓட்டுநரையும், நடத்துணரையும் தான் கூறுகிறேன் நடத்துணரின் காலை வார்த்தையை விட பெரிய விழிப்புணர்வு எதுவும் இருக்க முடியாது
மேலே வா ..
போயிட்டு இரு..
நடுவில் நிக்காதே! அத்தனை கூட்டத்திலும் பேருந்துள் முன்னுக்கும், பின்னுக்கும் போராடிக் கொண்டிருந்த போர்வீரர்(நடத்துனர்)
பேருந்து கணம் தாங்காமல் ஒருபுறம் சாய்ந்தாலுமே அதை கச்சிதமாக ஓட்டி போன சேனாதிபதி (ஓட்டுநர்)

அடுத்ததாக நான் இறங்கும் இடம். நடுவில் வந்து மாட்டியதால் எப்படி இறங்கப் போகிறேன் என்று தவித்து கொண்டிருந்தேன் நல்ல வேலை என்னுடன் ஒரு தாத்தாவும் இறங்கியதால் அவருக்கு நகர்ந்து கொஞ்சம் இடம் விட்டனர் நானும் அப்படியே சந்தில் சிந்து பாடி கொண்டேன் எப்படியோ அந்த போர்க்களத்தில் வெற்றி பெற்று கிரீடம் சூட கல்லூரி சென்றால் முதல் வகுப்பு முடிந்து விட்டது….இப்பொழுது எனக்கு இரண்டு நிமிஷம் தான் இருக்கிறது முதல் வகுப்பு ஆசிரியர் வெளியே வந்ததும் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் உள்ளே வருவதற்குள் நான் என் மேசையிடம் செல்ல வேண்டும் , எப்படியோ வெற்றிகரமாக அமர்ந்த பின் தான் மூச்சு நிதானமானது…

எப்பொழுதும் போல் அன்றும் கணக்கு வகுப்பு கண்ணை கட்டியது ,அறிவியல் ஆராரோ பாடியது, தமிழ் தாண்டவம் ஆடியது !ஆங்கிலம் அமர்க்களமாக சென்றது .

மாலை கல்லூரி முடிந்து காஞ்சி போன கருவாடாக கல்லூரி பேருந்தில் வீடு திரும்பினேன் மேடையில் வைத்த வீட்டு சாவியை காணவில்லை எங்கே போயிருக்கும் என்று எனக்கு தெரியும் மெதுவாக கதவை திறந்து பார்த்தேன் அம்மா “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கத்தினால் அவளை தவிர வேறு யாருக்கு நினைவிருக்க போகிறது என்று எண்ணி சிரித்தேன்…

இரண்டு மாதங்கள் கழித்து அவளை பார்ப்பதால் எனக்கு பேச கதைகள் நிறைய இருந்தது ஆனால் பயண களிப்பு அவளை உறங்க வைத்து விட்டது மெதுவாக அவள் அருகில் அமர்ந்து நேற்று இரவு நிறுத்திய “கள்ளிக்காட்டு பெண்” புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்……… 

                                     FREE _SPIRIT

                                         SARA… 


	
Exit mobile version