நானும் என் சகோதரனும் உரையாடிக் கொள்ளும் பொழுது நான் அவனிடம் கூறிய உண்மைக்கதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
‘தூத்துக்குடி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் முத்து மாஸ்டர் ஆகிய என் கதை’.
‘முத்து மாஸ்டர் என்ற பெயரைக் கேட்கும் பொழுது உங்களுக்கு நான் ஒரு ஆண் என்ற எண்ணம் தான் வரும் ஆனால் நான் ஒரு பெண் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம் நான் ஒரு பெண் தான்! என்னுடைய உண்மை பெயர் பேச்சியம்மாள், எனக்கு 20 வயதிலேயே திருமணம் முடிக்கப் பட்டது, ஆனால் திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே என் கணவர் மாரடைப்பில் இறந்து போக நேரிட்டது அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அது மட்டுமில்லாமல் நான் அப்பொழுது கர்ப்பிணி பெண்ணாக இருந்தேன்’.
‘என் குடும்பத்தில் அனைவரும் மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள் ,ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை; தன் கணவர் தொட்ட உடலை வேறு எவரும் தொடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது . அதனால் தன் வயிற்றில் இருந்த குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினேன்’.
‘சில சந்தர்ப்பங்களில் வேலைசெய்து கிடைத்த பணத்தை வைத்து தன் வாழ்க்கையை நகர்த்தினேன் . பிறகு ஒருநாள் இரவு வேலை முடித்து வந்து கொண்டிருக்கும் பொழுது லாரி டிரைவர் தவறான வார்த்தையை பயன்படுத்தி தவறான முறையில் என்னை அழைத்தான் அந்த வருத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் நான் வருத்தம் அடைந்தேன்’.
‘தான் ஒரு பெண்ணாக இருப்பதில் தானே இந்த நிலை எனக்கு ஏற் பட் டது என்ற எண்ணத்தில் நான் ஒரு ஆணாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டேன்’.
‘ அதனால் தன் அடையாளம் முழுவதையும் மாற்றிக்கொள்வதற்காக ஆதார் அட்டை போன்ற அனைத்து அடையாளங்களையும் மாற்றிக்கொண்டேன் . இவ்வாறு தன் வாழ்க்கையை கடக்கும் பொழுது அன்று சந்தித்த அதே லாரி டிரைவரை மறுபடியும் சந்திக்க நேர்ந்தது’.
‘அப்பொழுது அவன் என்னிடம்,
‘பீடி இருந்தா கொடுப்பா’ என்று கூறும்பொழுது எனக்கு மிகப்பெரிய ஆச்சிரியம்! ஏனென்றால் இதுவே நான் ஒரு பெண்ணாக இருந்தபொழுது இவன் இவ்வாறு கூறவில்லை அதுவே நான் ஒரு ஆணாக நடிக்கும்பொழுது எனக்கு அவ்வாறு நடக்கவில்லை என்று நினைத்தேன்’.
‘இவ்வாறு சுமார் 30, 36 வருடங்கள் கழிந்தன .அதேபோல் எனக்கு பிறந்த பெண் குழந்தைக்கும் நன்றாக திருமணம் முடிந்தது , வாழ்க்கையும் நன்றாக இருந்தது’.
‘இதெல்லாம் நான் ஏன் இப்பொழுது கூறுகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? நம் சி. எம் ஸ்டாலின். அவர்கள் பெண்களுக்கு இலவச பேருந்து என்று கூறிய பிறகும் நான் பணம் கொடுத்து தான் சென்றேன் அதனால் இப்பொழுது கூறுகிறேன் என்று வேடிக்கையான பதிலை உங்களிடம் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? உண்மையை கூறவேண்டுமென்றால் எனக்கு இருந்த கடமை எல்லாம் நான் முடித்துவிட்டேன் அதனால் நான் என்னுடைய உண்மையை வெளியே கூறுகிறேன்’.
‘நான் இறந்த பிறகு இறுதி சடங்கு செய்யும்பொழுது எனக்கு வேஷ்டியும் சட்டையும் தான் அணிந்து இருக்க வேண்டும் . இதுதான் என்னது இறுதி ஆசையும் கூட, ஏனென்றால் இந்த வேஷ்டியும் சட்டையும் மால்தான் நான் இத்தனை ஆண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்தேன்’ என்றால் பேச்சியம்மாள்.
இறுதியாக நானும் என் சகோதரனும் நினைத்த ஒன்று; சுமார் 30, 36 வருடங்களாக தன் அடையாளத்தை மறைத்து ஒரு பெண் வாழ்ந்ததை நினைத்து வெட்கப்படுகிறோம்.
ஒரு பெண் சுதந்திரமாக வாழவேண்டும் என்று நினைத்தால் ஓர் ஆணாக தான வாழ வேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஏன் தள்ளப்பட்டால் என்று தெரியவில்லை?.
‘சில வாரங்களுக்குப் பிறகு, சத்யா என்கின்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி இரவு ஒன்பது மணியளவில் டியூஷன் முடித்து வந்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு ஆண்கள் தவறான முறையில் அவளிடம் நடந்து கொண்டார்கள். அதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் கோபம் ஏற்பட் டது உடனே நான் அங்கு சென்று தடுத்து நிறுத்தினேன் . இந்த உலகம் என்பது இப்படி தான், நாம் அதற்கு தகுந்ததைப்போல் துணிந்து செயல்பட வேண்டும்.’
‘இதோ உன்னருகில் மின்னிக் கொண்டிருக்கும் மின்மினி பூச்சியைப் போல் தான் நானும் வாழ்ந்தேன். இரவெனும் இருள் சூழ்ந்தாலும் மின்மினிகள் தரும் ஒளி போல நீ வாழ்ந்துகாட்ட வேண்டும் என்றேன். சிறிதுநேரம் கழித்து, தற்காப்புக்கலை தெரிந்துகொள் என் றும் கூறினேன் அதற்கு அவள் விழிகள் துடைத்துக் கொண்டே சென்றால்’.
நன்றி!