ஒரு வீட்டின் ஆன்மா- விஜயா    சுப்ரமணியம்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 149 ஒரு வீட்டின் ஆன்மா- விஜயா    சுப்ரமணியம்

பஸ் புழுதியை பரப்பிக்  கொண்டுஅந்த மார்க்கெட்டுக்குள்  

நுழைகிறது,  மார்க்கெட் வாசலில் நிற்கும் பஸ்ஸில்  

இருந்து  வேகமாக ஆள்கள்  இறங்குகிறார்கள் சீதா மாமி   

கையில் ஒரு கட்டைபையை  எடுத்துக்  கொண்டு 

வேகமாக   இறங்குகிறாள்,   

      வயது 70, கட்டியிருக்கும் காட்டன் சேலையில் 

இன்றும்  அம்சமாக  தெரிகிறாள்,  நல்ல உயரம்,  

சிவந்த  நிறம், இந்த  வெய்யிலில்  இன்னும் சிவப்பாக  

தெரிந்தாள்,  அக்னி   நட்சத்திர வெய்யில்  தகிக்கிறது 

தார் உருகி விடும்  போல அவ்வளவு தகிக்கிறது, 

     தலையில் புடவை தலைப்பை    முட்டாக்கு  போல்  

போட்டுண்டு  அவள் வேகமாக  நடக்க  ஆரம்பிக்கிறாள் 

ஆட்டோ  ஒன்றையும்  காணோம்,,அவள் 

கவலைப்படலை,   

கோவில் வந்து  விட்டது, இன்னும்  ,சிறிது தூரம் 

போனால் வீடு வந்துடும்,  கோவிலின்   இறுபுறமும் 

வீடுகள்,, இன்னும் சில   வீடுகளில் ஆள்கள்  ,குடி 

இருக்கிறார்கள்,, 

     அதோ  வீட்டி்ன் எதிரேயுள்ள  பெரிய  வேப்பமரம் 

,வீடு  வந்து விட்டது, பச்சை  பெயின்ட்  அடித்த வீடு  

என்றால்    எல்லோருக்கும்   தெரியும்” வெங்கிடி  மாமா  

வீடூதானே?”என்று எல்லோரும் கேட்பார்கள்,  சீதாமாமி  

மெள்ள வீட்டை பார்க்கிறாள் “கேட்டை  திறந்து  உள்ளே 

,போகிறாள்   “சீதாமாமி”  என்று மெல்லிய  குரல்  

கேட்கிறது  திடுக்கிட்டு   சீதா திரும்பி  பார்க்கிறாள், 

யாரும்   தெரியவில்லை, திரும்ப குரல்   கேட்கிறது, 

“நான் உங்க    வீடு   தான்  பேசறேன்  என்னை  இபப்டி  

ஒரேயடியாக  மறந்துட்டேளே? நான்  என்ன பாவம்    

பண்ணினேன்  ?   சீதாமாமி   நின்று  விட்டாள்,,,அந்த  

குரலி்ல  இருந்த  ஏக்கம் மாமிக்கு புரிந்தது,  நிறைய  

நா்ள் பிரிந்திருந்த  ஒருவரை ,சந்திக்கும்  பொழுது 

தோணும்   ஏக்கமும்,சந்தோஷமும்  ,தான்  தெரிந்தது, 

அந்த  குரலில், 

        மாமி  மெள்ள  கேட்  வாசலில்  இருந்த பெயர் 

பலகையே  துடைக்கிறாள்  “ஆனந்த  பவன்   என்ற 

பெயர்  மட்டும்  இருக்கிறது,, மாமி  உள்ளே  போகிறாள்  

வாசலில் இரண்டு  பெரிய  திண்ணை,  குழந்தைகள்  

விளையாடவும்,   பெரியவர்கள்  அரட்டை அடிக்கவும்  

உள்ள  திண்ணை,  ,கதவை  திறக்கிறாள், ,உள்ளே  ஒரே   

ஒட்டடையும்,  புழுதியுமாய்,   இருக்கு,,   வலது பக்கம்  

இருந்த  “மகாலஷ்மி என்ற   பத்தாயத்தை  பார்க்கிறாள்     

,        நடுவில்  முற்றம்,   அதை  ,சுற்றி  நாலா 

பக்கமும் தாழ்வாரம்,  முற்றத்தின்  ஒரு  பக்கம்  கிணறு  

அந்த    பக்கம் ,குளிக்கும்  அறை ,பெரிய  தளம்  ,ஒரு 

தளத்தின்   முடிவில்  ஒரு  பெரிய ,சமையலறை,,  

ஐம்பது  பேருக்கு தாராளமாக  சமைக்கலாம் 

தளத்திற்கு  இந்த  பக்கம்  பெரிய  பெரிய  விசாலமான  

காற்றோட்டமான   அறைகள், ,மேல்  மாடியிலும்  

நிறைய,,,அறைகள்,   

      கேட் திறக்கும்  சத்தம்  கேட்கிறது, “ஆறுமுகமும்   

செல்லாயி  இருவரும்   வருகிறார்கள் , சீதாம்மாநீங்கள்   

நாளை  தான்  வருவீர்கள்  என்று  நினைத்தோம்,  பத்து 

நிமிடம்  கிணற்றுபக்கத்தில் உள்ள,,,கல்லின்   மேல்  

அமர்ந்து இருங்கள்”   சீதா பின்கட்டுக்கு  போகிறாள்,  

அங்கு  முல்லைசசெடி,  பவழமல்லி,செம்பருத்தி   

எல்லாம்   பூத்து  குலுங்கி  நிற்கிறது,   யாரோ அதற்கு  

தண்ணீர்  ,விடுகிறார்கள்,  

     அதை பார்த்தவுடன்   பழைய நினைவுகள்  

வருகிறது ,   குளிக்கப்  போகும்  கணவனுக்கு  டவல்  

கொடுக்க  வருகிற,சீதாவை ராகவன் மெள்ள பவழமல்லி  

மரத்தடிக்கு கொண்டு   போகிறா்ன்   பவழமல்லி 

செடியை   ஆட்டி  அத்தனை   மலர்களையும்   அவள்  

மேல்   ,பொழிய,,,வைக்கிறான், பூ  விழுந்ததில் 

சிலிர்க்கும்  அவள் ,கையை,,பிடிக்கிறார், அதற்குள்,  

யாராவது    வந்து விடுவார்கள்,   

         பழைய ,நினைவுகளில் இருந்து  விடுபட்டா்ள்   

சீதா ஆறுமுகத்தின்   குரலை  கேட்டு, முன்பக்க  உள்ள  

பெருக்கி  துடைத்த  அறைக்கு   வருகிறாள், 

   நாளை  எல்லோரும்   வந்து விடுவார்கள்,  இங்கு   

வந்ததே   இந்த வீட்டை விற்கத்தான்,சீதாவின்  மனம் 

வீட்டின் ,ஏக்கமான  குரலை கேட்டு  கலங்கி இருந்தது, 

மறுநாள்  காலைக்கு் ,   வீடு  வெள்ளை,,அடித்து  புது 

வீடு  போல  ஆகிவிட்டது, “வாசலில்  பச்சை பெயின்ட் 

புதிதாக  அடித்தார்கள்,,வாசலில்  ,பூமாலை கட்டினார்கள் 

புதுசா  கர்டன்  போட்டு படுக்கையும்  புதுசு , 

        , காவையில்  எழுந்து  செல்லம்மா  காபி 

 போட்டு  கொண்டு இருந்தாள், ,காபியின் மணம்  வீடு 

பூரா  பரவியது,  முன்னாடி   எல்லாம்  பசுக்கள் 

இருந்தது,,  வீட்டிலேயே   கள்ளிசொட்டு,  போல்  

திக்கான   பால்,,,இப்பொழுது   வெளியில்  இருந்து  தான் 

வாங்கிண்டு   வரணும்,, 

        வாசலில்  ஒரு  கார் நிற்கிறது, மூத்த  பையன்  

காத்த்திக்   மனைவி  குழந்தைகளுடன் காரிலிருந்து  

இறங்குகிறான்,  “சீதாவை  குழந்தைகள்  பாட்டி ” பாட்டி 

என்று   கட்டி  கொள்கிறார்கள்,  பழைய  வீடாக 

இருக்கும்   என்று   நினைத்து   வந்தவர்களுக்கு 

வாசலில்  கட்டியிருந்த  ,பூமாலை  ,புது பச்சை 

பெயின்ட் எல்லாம்  ஆச்சர்யமாக  இருந்தது,,வீட்டுக்கு  

எதிரில்    இருந்த   பூந்தோட்டத்தில்   விளையாட  

போனார்கள்,  மரத்தில்   தொங்கி  கொண்டு  இருக்கும்  

ஊஞ்சலில்   ,வீசி  வீசி  விளையாடினார்கள் 

      அடுத்த ,,மகன்  மோகன்   வரும் பொழுதே  கடு  

கடு என்று வந்தான், எப்பொழுதும்   வேலை  டென்ஷன்,   

இதில்  பிஸினஸ்  பெரிசாக்கணும் என்று  கடன் 

வேற   வாங்கி இருக்கான்,  இந்த வீடை விற்கணும்  

சொன்னதே   இவன்   ஐடியா  தான்,   

மூன்றாவது   மகன் ஐயப்பன்   சென்னையில் 

இருந்து மனைவி   குழந்தைகளுடன்  வந்து 

விட்டான்,   

      வாசலில்    ஒரு  கார் வந்து  நி்ன்றது,  அதில் 

இருந்து ஒரே  பெண்  வைதேகி   குழந்தையுடன்  

இறங்கினாள் ,அவள்   உள்ளூர்  தான் கணவனை 

காணவில்லை,, 

      சீதா  எல்லோரையும்   சிரித்த  முகத்துடன், 

வரவேற்றாள்,, எல்லோரும்  எதற்காக  வந்து   

இருக்கிறார்கள்  என்று  நினைத்த பொழுது   மனம்  

வலித்தது,  தாய்க்கும்   மேலாக நேசித்த  வீட்டை  விற்க   

மனசு  வரவில்லை,,, 

      வீட்டின்   ஆன்மாவும் இவர்களை பார்த்து   

சந்தோஷப்பட்டாலும் தன்னை ஒருவரிடம் விற்கத்  தான்  

வந்து இருக்கிறார்கள்  என்று  நினைத்து துன்பப்பட்டது,  

இந்த வீடு  தாத்தாகாலத்து    வீடு  தான்,பல   

குடும்பங்களின்  சந்தோஷத்திலேயும்,”துக்கத்திலேயும்  

இந்த வீட்டுக்கு  சம  பங்கு உண்டு, கொஞ்ச நாள்   

இவர்கள் ஒவ்வொருவராக    படிப்பு கல்யாணம்,   

வேலை  என்று  வீட்டைவிட்டு  போகும்  பொழுது  வீடு  

அமைதியாக   அழுதது,   “என்றாவது  ஒரு  நாள்  

திரும்பி    வருவார்கள்  என்று   ஏக்கத்துடம்  காத்து  

இருந்தது,  இன்று  எல்லோரும்  வந்து இருக்கிறார்கள்,  

ஆனால்  சேர்ந்து  பழையபடி  ஒன்றாக சேர்ந்து  இருக்க 

அல்ல, இந்த வீட்டை விற்க, வாங்க  போறவர்  இதை  

இடித்து புதிதாக   கட்ட போகிறார்கள்,  இத்தனை  நா்ள்  

இவர்கள்   திரும்பி  வருவார்கள்   என்று  ஆவலோடு  

காத்திருக்கும்  நாட்கள் முடிந்தது,  இந்த  வீடை  

இடி்க்கும் பொழுது  வாழ்ந்தவர்களின்   சந்தோஷமும்  

துக்கத்தோடு,  என்  ஆன்மாவும் புதைந்து  போகும் 

மனதில் வருத்தத்தோடு தன்   கடைசி நாளுக்காக  காத்து 

நி்ன்றது  ” ஆனந்தபவன்?”” 

            எல்லோரும்   ரொம்ப  நாளைக்கு   பிறகு 

சேர்ந்து   தளத்தில் உட்கார்ந்து   சாப்பிட்டார்கள், சிரிப்பும், 

கேலி  பேச்சுமாக  அந்த  தளமே அதிர்ந்தது  சீதா 

எல்லோருக்கும்   பரிமாறினாள்,  ஒரு  தாய்க்கு  தன்  

எல்லா  குழந்தைகளுக்கும்    பேரன் பேத்திக்கும்  உணவு 

பரிமாறுவதி்ல்  கிடைக்கும்  சந்தோஷம்  வேறு எதிலும்  

இ்ல்லை, சாயங்காலம்  குழந்தகளோடு   ஒரு  நாள்  

கோவிலுக்கு   நடந்து  போவது, அங்கு  பிரகாரத்தில் 

எல்லோரும்    அமர்ந்து   பிரசாத  தேங்காய்   

வாழைப்பழம்  சாப்பிடுவது,   

இன்னோரு   நாள் எல்லோரும்  ஆற்றங்கரை 

கோவிலுக்குப்   போய்   தேவியை  கும்பிட்டு 

வந்தார்கள். , 

       அன்று   இரவு   எல்லோரும்,,மொட்டை 

மாடியில்   கூடினார்கள்,சீதா வீடு விற்கப்  போவதை  

பற்றி  பேசினாள்,,  மூன்று  மகன்களிடமும் 

தனியாக   பேசினாள், மூத்த  பையன்  பெண்  

கல்யாணத்தி்ற்கு  பணம்   தேவை  படுகிறது  என்றான் 

,இரண்டாம் மகன்   தான் பிஸினஸீக்கு  கடன் வாங்கிய 

பணத்தை திருப்பி  அடைக்கணும்,  மூன்றாவது  மகன் 

பாவம் அதிகம் படிக்காதவன்  ஒரு  சின்ன  வீட்டி்ல்  

வாடகைக்கு இருக்கான், அவனுக்கு தனக்குன்னு  ஒரு  

சொந்த  வீடு  வாங்கணு்ம்   என்று  ஆசை  , வைதேகி  

யாரிடமும்   பேசாமல்  ஏதோ உலகத்தில்   சஞ்சரிப்பது  

போல்  இருந்தாள் ,அவள் கணவனையும்   காணவில்லை  

      எப்பொழுதும்  அம்மா  என்று ஓடி  வரும் 

மாப்பிள்ளையை   காணாததால்   சீதா  கலவரப்பட்டாள்,    

ஏன்  வரவில்லை  மாப்பிள்ளை? என்று   கேட்டதற்கு  

ஊருக்கு   போய்  இருக்கான்  என்று   வைதேகி 

சொன்னாள் ,அவள்   கண்ணை  பார்க்காமல் பேசினதில்   

இருந்து  அவள்  சொல்வது   பொய்   என்று  தெரிந்து  

விட்டது,   வீடு   விற்பதை  தள்ளி  போடலாம், ஆனால் 

வைதேகி  பிரச்னை   தள்ளி   போட முடியாது    

       மறுநாள்   சீதா  கார்பிடித்து  பக்கத்து ஊரில்  

இருக்கும்  வைதேகி   வீட்டுக்கு  போகிறாள் , அங்கே   

பித்து  பிடித்தவன்  போல்  கலைந்த  தலையும் கசங்கிய  

ஷரடுமாக  இருக்கும்   ராமனை பார்க்கிறாள், மெள்ள 

அவரை சமாதானப்படுத்தி  முதலில்  சாப்பாடு  

போடுகிறாள்  சீதா,  அமைதியான பிறகு ராமன்  

எலலாத்தையும்   சொல்கிறார் சுபாவத்திலேயே   

வைதேகி  தான்  ஒரு பணக்காரி,  அழகி    என்ற  

கர்வம் மிக்கவள் , கணவர்  அதிகம்  பணம்  

இல்லாதவர்,,இதனால்   வீட்டில்   எப்பொழுதும்  சண்டை,  

தனக்கு  செலவழிக்க   நிறைய  பணம்  வேணும், ராமன் 

எங்கிருந்து  போய்  பணம்  கொண்டு வருவான்?   

 இரண்டு   நாட்களுக்கு  முன்னால்  கோபித்துக்    

கொணடு  பிறந்தாத்துக்கு  வந்து  விட்டாள 

  இனிமே  டைவோர்ஸ்  தான்,  சீதா  தன்  பெண்ணை   

திறுத்த  இது  தான்  சரியான   சந்தர்ப்பம்   என்று  

மாப்பிள்ளை   கூட ஒரு  ப்ளான்  பண்ணுகிறாள்,            

       வீட்டுக்கு  வந்த  சீதா பெண்ணிடம்   பேசுகிறாள்   

,மத்தியானம்  ஒரு  கூரியர் வருகிறது அதி்ல்  

மாப்பிள்ளை  வைதேகிக்கு  டைவோர்ஸ்   நோட்டீஸ் 

அனுப்பி  இருக்கிறான்  இதை  எதிர்பார்க்காத   வைதேகி 

பயந்து  விட்டாள்,  பிறந்தாமோ இடியபோகிறது ,இரண்டு  

குழந்தைகளை   வைத்துக்  கொண்டு   என்ன    

செய்வது?  அண்ணன் மார்கள்  யாரும் உதவ 

மாட்டார்கள்,  வைதேகி  ,சும்மா   பயமுறுத்திலாள்,  

ராமன்  இப்படி  பதிலுக்கு   டைவோர்ஸ்  நோடிஸ்  

அனுப்புவான்னு   நினைக்கலை, பின்னாடி   தோய்க்கிற  

கல்லில்  உட்கார்ந்து  அழுகிறாள்,  அப்பொழுது  யாரோ  

பேசற   குரல்  கேட்கிறது,  “அழாதே  வைதேகி   

ஒண்ணும்    ஆகாது,  ,கவலைப்படாதே?  வீட்டின் 

ஆன்மா  அவளை சாந்தப்படுத்தியது, ஒவ்வொரு  

வீட்டிலும்    அந்த வீட்டுக்கு  உரிய ஆன்மா 

“ஏப்பொழுதும்   நல்லதையே  ,நினைக்கும்  வீடு”   

வீட்டில்  அம்மாவிடம்  பேசுகிறாள்  அம்மா  “உனக்குத்  

தான்   அவனை  பிடிக்கலையே”?  டைவோர்ஸ்  

பண்ணிட்டு   நிம்மதியாக  இரு,,,” அம்மா எனக்கு  ஒரு  

நாளும்  அவரை பிரிய   வேண்டாம்,  இனி  நான்  

சண்டையே   போட  மாட்டேன்,  வாசல்  மணி   

அடிக்கிறது,  ராமன்  நிற்கிறான்  வைதேகி  உடனேய  

அவன்  காலில்  விழுந்து  மன்னிப்பு   கேட்கிறாள், 

,சீதம்மாவும்,,ராமனும் தங்கள் டைவோர்ஸ்  நாடகம்  

வெற்றி   பெற்றதற்கு  சந்தோஷப்படுகிறார்கள், , 

           குடும்ப நலனுக்காக    எல்லோரும்  

குலதெய்வ கோயிலுக்கு   போக  தீர்மானம்  

பண்ணினார்கள்,   தந்தை  இறந்த   பிறகு  இப்படி  

வெளியில்    சேர்ந்து  போவது   இது  தான் முதல்  

தடவை,,  குழுந்தைகள்  பெரியவர்கள்   என்று  

பதினைந்து   பேர்  வேனில்,, 

    கோவிலுக்கு  போவதற்கு  மலை மேல்  ஏற  

வேண்டும், வளைந்து   வளைந்து  போகும்  கொண்டை 

வளைவுகள்  ,பச்சை  பசேலென்று  புல் வெளிகள், 

.அருவிகள்,  ,பஞ்சுப்  பொதியாக   வந்து  மேலே  தழுவி  

விட்டு  போகும்  மேகங்கள்,  , 

  பச்சை புல்வெளியில் இறங்கி   எல்லோரும்   இட்லி 

சாப்பிடுகிறார்கள்,   பிறகு  திரு்ம்பவும்  வேனில்,, 

கோவில்,,,வந்து  விட்டது,, கோவில்  கோபுரமும்,   

பிரகாரமும்  ,பார்க்க  மிக  அழகாக இருந்தது, 

      எல்லோரும்   சேர்ந்து  அரச்சனை  ,அபிஷேகம் 

எல்லாம்   தேவிக்கு  பண்ணுகிறார்கள், ஒரு பட்டு 

புடவை  சார்த்தினார்கள்,, 

   பிரஸாதத்தை   சாப்பிட்டு  விட்டு  கீழே  இறங்கும்  

பொழுது   சாயங்காலம்   ,ஆகி  விட்டது,  எல்லோரும் 

ஒரு  ,புல்வெளியில்   இறங்கி  விளையாடினார்கள், 

,பெரியவர்களும் சிரியவர்களும்    சேர்ந்து   சிரித்து  

நிறைய   விளையாட்டு   விளையாடினார்கள்” 

       திரும்பி  வரும்பொழுது  எல்லோர்  மனதிலும்  

ஒரு  வருத்தம்,  இந்த  பதினைந்து  நாட்கள்  எப்படி  

போனது   என்றே  தெரியவில்லை,பணம்,ிபிஸினஸ; 

எல்லாத்தையும்   மறந்து இருந்தார்கள்,  ஒரு 

டென்ஷனும்   இல்லை, 

   மறுநாள்   எழுந்தவுடன்  எல்லோரும்   

அம்மாவிடம்  பேசினார்கள்,  வீட்டை  வித்துட்டா   

பிறகு  இந்த  மாதிரி  சேர முடியாது,  வாழ்க்கையில்   

பணம்  மட்டும்  முக்கியம் இல்லை,  வருடத்துக்கு  

ஒரு,,முறையாவது   குடும்பம்  சேரணும் அப்படி  

சேரணும்  என்றால்  வீட்டை  விற்கக்  கூடாது, 

எல்லா  மகன்களும்  பணத்துக்கு  வேறு வழி 

,தேடுகிறோம்  

இப்போ  வீட்டை   விற்க  வேண்டாம், 

       சீதாவுக்கு   ரொம்ப  சந்தோஷம்,  மறு நாள்  

வீட்டை   வாங்க  வந்த  பொழுது  அவரை  திருப்பி  

அனுப்பி  விட்டார்கள்,,அன்று   இரவு  சந்தோஷமாக  

கழிந்தது,   

      மறுநாள்  கிளம்பி  விட்டார்கள்,, சீதா   வீட்டுக்கு  

கை  அசைத்தாள், சீக்கிரம்  திரும்பி  வருவோம்  ” 

என்று,   வீடும்   சந்தோஷமாக  தலை  அசைத்தது, 

       வேன் கிளம்பி  விட்டது,  வீட்டின்  ஆன்மா 

இவர்கள்   அடுத்ததடவை  திரும்பி  வருவதற்காக   

கேட்டிலேயே   காத்து  நிற்கிறது, 

Exit mobile version