சித்தரிக்கப்பட்ட ஓவியத்தில் இருந்து சிறிது சிறிதாய் தெறித்தது கற்த்துகள்கள்…
ரீங்காரமிட்டு தொடர்ந்து வட்டம் அடிக்குறது அந்த சிலையின் வலியில்லா சிணுங்கல்கள்..
தட்டி தட்டி உளி கொத்தி கொத்தி சித்தமாய் உதித்தது ஒரு அம்மன் சிலை..
கூரான பல கற்குவியல் கோவத்தில் என் காலில் கீறலிட்த்தது அவைகளை வேண்டாம் என்று ஒதுக்கிய பாவத்திற்கு…
அச்சிலைக்கு என் கையால் கண் திறக்க நேரம் இருந்தும் என் கண்ணை திறக்க முடியவில்லை எரிச்சலுடன் கூடிய அசதியில்..
ஊரே அம்மன் வருகைக்காக காத்திருக்க.. அந்த அம்மன் காத்திருந்தது இந்த சித்தன் என்னும் சிற்பிக்காக…
இதையும் படியுங்கள் : தீய்ந்து போதல்…