தீர்க்கப்பட வேண்டிய கணக்கு-மதுரை ரா ஸ்ரீதர்

 

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 126 தீர்க்கப்பட வேண்டிய கணக்கு-மதுரை ரா ஸ்ரீதர்

ரூ.6 கோடியைக் காணவில்லை. .”பாரு  முருகேசா, நீ ரொம்ப 

சின்ஸியர். இப்போ பெரிய தொகையை குறையுதுன்னு CA 

முடிச்சிட்டு வந்திருக்கிற என் தங்கை மகள்  அபிநயா சொல்றா. 

ஆறு மாசம் முன்னால நீ பொண்ணு கல்யாணத்துக்கு லோன் 

கேட்டபோது என்னால ஹெல்ப் செய்ய முடியல. அதுனால இந்த 

மாதிரி திருட்டுத்தனம் செய்யக்கூடாது” என்றார் எரிச்சலோடு.  

“ஐயா, ‘கடவுள் சத்தியமா அப்படி எதுவும் எடுக்கல, நம்புங்க’ ன்னு 

சொல்றாரு” என்றான் அருகே இருந்த வக்கீல் அருண்.  

சந்தர் குமார் சேட்டிற்கு அவருடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து 

வரும்  முருகேசன்  மீது பெரிய சந்தேகம்.  

முருகேசன்  அவரிடம் இருபது வருடங்களுக்கு மேல் பணிபுரிகிறார், 

இது வரை எந்த தில்லுமுல்லும் செய்யாத சின்ஸியரான 

ஆள்….பிறவியிலிருந்தே  முருகேசனுக்குக் காதும் கேட்காது. வாயும் 

பேசாது.  

விஸ்வாசியான  முருகேசன் மீது சந்தர் குமார் சேட்டிற்கு சந்தேகம் 

வருவதற்கான காரணம் சில மாதங்கள் முன் நடந்த ஒரு 

நிகழ்வுதான்…… 

“முருகேசன், உன் மகன் வந்திருக்கான்.  அவினாஷ், என்ன 

வேணும்?” என்று கேட்டார் சந்தர் குமார் . 

“ஐயா, என் அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு. . ஒரு 

அஞ்சு லட்சம் கடனா கொடுத்தா, நான் வேலைக்கு ஜாயின் 

பண்ணிட்டேன். மாசாமாசம் அம்பதாயிரம் ரூபாவா ஒரு 10 

மாசத்துல கடனை அடைச்சுடறேன்” 

“வேணும்னா  ஒரு லட்சம் தர்றேன். அஞ்சு லட்சம் என்கிட்டே 

இருக்காது” என்றார் சந்தர் குமார் .  

===================================== 

சந்தர் குமார் “சோட்டு” என்று குரல் கொடுத்தார்.  

சோட்டு என்கிற பெயருக்கு நேர் விரோதமாக ஆறடிக்கு மேல் 

உயரமும், உடல்வாகும் கொண்ட ஒருவன் வந்து, “உஸூர்?’ 

என்றான். 

“முருகேசன் உண்மையைச் சொல்லும் வரை நம் வீட்டு ஸ்டோர் 

ரூமில் இருக்கட்டும்.” என்றார் அவனிடம் சிந்தி மொழியில். 

===================================== 

இரவு 11 மணிக்கு வாசல் பஸ்ஸர் தொடர்ந்து ஒலித்தது.சந்தர் குமார் 

கதவைத் திறந்தார். வெளியே முருகேசன் மகன்  அவினாஷ்.. 

“வா, பதட்டப்படாத. இந்தப் பாரு, என்னோட பணம் 

கொஞ்சநஞ்சமல்ல, 6 கோடி காணாமப் போயிடுச்சு. எங்கேன்னு 

கேட்டா உங்கப்பா சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்ல. உங்கப்பா 

கொஞ்ச நாளைக்கு இங்கயே தூங்கிட்டு, குளிச்சு, சாப்பிட்டுட்டு 

வேலை பார்க்கட்டும். வீட்டுக்குப் போக வேண்டாம்” என்றார் 

கறாராக. 

“ஐயா, அப்பா அந்த மாதிரி செய்யற ஆளு இல்லை. உங்ககிட்ட 20 

வருஷத்துக்கு மேல விஸ்வாசமா வேலை செய்யறாரு.  இப்படி 

அடைச்சு போட்டு விசாரிக்கறது ரொம்ப தப்புயா. உங்களுக்கு 

சந்தேகம்னா போலீஸ் கிட்ட புகார் கொடுங்க. இது சரியில்லை” 

என்றான்  அவினாஷ்  படபடப்பாக.  

“எது சரி, எது தப்புன்னு நீ எனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் 

இல்ல  அவினாஷ் ” என்றார் மிரட்டலான குரலில்.  

“இந்த 6 கோடி கூட காணாம போச்சுன்னு உங்களால போலீஸ் 

கிட்ட புகார் கொடுக்க முடியாது. ஏன்னா, அது கணக்கில வராத 

கள்ளப் பணம்” என்றான்  அவினாஷ்  ஆத்திரத்துடன்.   

சந்தர் குமார் “சோட்டு?” என்றார்.  

அடுத்த சில நிமிடங்களில்  முருகேசன் கீழே சோட்டுவுடன் வந்து 

சேர்ந்தார்.  அவினாஷ் அங்கே நிற்பதைப் பார்த்து விட்டு அவருக்கு 

எதுவும் புரியவில்லை. அவனிடம் சைகையில் என்னாயிற்று என்று 

கேட்க, அவன் கொஞ்சம் பொறு என்று சைகை செய்தான்.  

சோட்டு அவினாஷ் அருகே வந்து அவனை அடிக்க ஆரம்பித்தான். 

அவினாஷ் என்னதான் இளைஞன் என்றாலும் ஒரு தேர்ந்த 

அடியாளின் கைவரிசையைத் தாங்க முடியவில்லை. “ஐயோ, அப்பா, 

அம்மா” என்று அலற ஆரம்பித்தான்.  

முருகேசன் ஓடிச் சென்று சந்தர் குமாரின் கால்களைப் பிடித்துக் 

கொடு அழ ஆரம்பித்தார். சோட்டுவை நிறுத்தச் சொல்லி சைகை 

காண்பித்துவிட்டு, மேலே போகச் சொல்லிவிட்டு, தன் 

காலடியிலிருந்த  முருகேசனிடம், “உன் பையன் கிட்ட ஒரு பத்து 

நிமிஷம் பேசிட்டு மேல வா. பெரியவங்க கிட்ட எப்படி மரியாதையா 

பேசறதுன்னு அவனுக்குத் தெரியல” என்று கூறி நகர்ந்தார்.  

முருகேசன்  ஓடிச் சென்று  அவினாஷை  அணைத்துக் கொண்டார். 

சில நிமிடங்கள் இருவரும் சைகை மொழியில் தீவிரமாகப் 

பேசியபின், அவினாஷ் உள்ளே பார்த்து, “சந்தர் குமார் சேட் ” 

என்றான் சத்தமாக.  

===================================== 

சந்தர் குமார் சேட் என்று சப்தமாக அவினாஷ் அழைத்ததைக் 

கேட்டவர் கீழே வந்தார். அவர் கூப்பிடாமலேயே அந்த சோட்டு 

குண்டனும் கூடவே வந்தான்.  

“என்ன அவினாஷ் வாங்கின அடி பத்தாதா? என்ன விஷயம்?”  

“ஐயா, எவ்வளவு வருஷத்துக்கு ஒரு முறை முறைப்படி கணக்கு 

பாப்பீங்க?” 

“கணக்கு எதுவும் பார்த்ததில்ல. உங்க அப்பா மேல இருக்கிற 

நம்பிக்கைல அப்படியே அவர் சொல்றதைக் கேட்டுப்பேன். இப்போ 

என் தங்கை மகள்  அபிநயா  வருடாவருடம் தீவிரமாக கணக்கைச் 

சரிபார்க்கணும்னு சொன்னதால இப்போ பார்த்தவுடன்தான் 

உங்கப்பாவோட வண்டவாளம் தெரிய வந்திருக்கு” 

“நல்லது. இந்த அடியாள் சோட்டுவுக்கு மாசம் எவ்வளவு சம்பளம்? 

இவன் எவ்ளோ வருஷமா இங்க வேலை பாக்குறான்?” 

“ஏன்? அவனுக்கு சம்பளம்னு எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட 

இருபது வருஷமா இங்கேயே இருக்கான். வருஷம் எல்லா 

பண்டிகைக்கும் அவங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் 

புதுத்துணி வாங்கிக் குடுத்துருவேன். இவனோட அண்ணன், தம்பி, 

அப்பா எல்லோரும் என்கிட்டதான் வேலை செய்யறாங்க”  

“அப்படீன்னா, இவனுக்கு மட்டும் சொந்தமா வீடு கட்டற அளவுக்கு 

ஏது காசுன்னு கேட்டீங்களா? உங்க ஊரான ஜெய்ப்பூர்ல இருந்து 

கிட்டத்தட்ட 285 கிமீ தள்ளியிருக்கிற இவன் பொண்டாட்டி ஊரான 

கிம்ஸார் கிராமத்துல வசதியா வீடு கட்டினது எப்படின்னு கேளுங்க. 

அதுமட்டுமில்ல, இவனோட மகன் ரிஷி மும்பாயில இருக்கிற 

ரொம்பக்  காஸ்டலியான மேனேஜ்மென்ட் காலேஜான ஜம்னாலால் 

பஜாஜ்ல இந்த வருஷம் சேர்த்திருக்கான். அவனை விசாரிங்க. 

எங்கப்பாவை விடுங்க. இல்லைனா நாளைக்குக் காலைல 

போலீஸோட வந்துருவேன்.” என்றான் அவினாஷ் தெளிவான 

குரலில்.  

சந்தர் குமார் சேட்டுக்கு என்ன சொல்வது என்பது புரியவில்லை.  

நிதானித்துக் கொண்டு “சோட்டு, உனக்கு சொந்த வீடா? எனக்குத் 

தெரியவே தெரியாதே?” என்றார்.  

“உஸூர், அது உண்மையில்லை. அவன் பொய் சொல்கிறான்” 

என்றான் சோட்டு. 

“சரி உன் மகன் ரிஷி ஜம்னாலால் பஜாஜ் காலேஜிலா படிக்கிறான்?” 

என்றவர் “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு, மொபைலில் 

யாருடனோ பேசினார்..  

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சோட்டுவின் மனைவி 

லக்ஷ்மிபாய் பெயரில், அவருடைய அத்தை கொடுத்த சொத்து அந்த 

வீடு என்று பதில் கிடைத்தது. .  

“சோட்டு, உன் மனைவி லக்ஷ்மிபாய் எனக்கு மிக தூரத்துச் 

சொந்தம். அவளும் அன்னக்காவடிதான். அவளுக்கு வீடு பரிசளிக்கும் 

அளவுக்கு அத்தை யாருமே இல்லையே? இந்த வீட்டில் என்னையும், 

இந்த நடேசனையும் தவிர கஜானா சாவியை நீயும் அவ்வப்போது 

கையாண்டு இருக்கிறாய்….” சில நொடிகள் இடைவெளி விட்டு, 

மறுபடியும், மொபைலில் “அஜய்” என்று அழைத்து மெதுவே 

பேசினார்.  

நேரம் நள்ளிரவைக் கடந்து விட்டதால் சப்தம் இல்லாமல் ஒரு 

வேன்  வந்து நின்றது. ஹிந்திப் பட வில்லன்கள் போல ஐந்து 

ஆஜானுபாகர்கள் கீழே இறங்க, அதில் அஜய் என்பவன் மட்டும் 

உள்ளே நுழைய மற்றவர்கள் வாசலில் நின்று கொண்டார்கள்.  

“ஆ, அஜய், இந்தச் சோட்டுவை உனக்குத் தெரியும்தானே?  

என்னுடைய வேலைக்காரன் என்று இந்த ஏரியாவுக்கே தெரியும். 

இங்கே வேண்டாம். கண் மறைவான இடத்திற்குச் சென்று 

முடித்துவிட்டு எரித்துவிடுங்கள். இதோ ரூ  25 லட்சம். நாளை அந்த 

சாம்பலோடு வா. மீதி  25 லட்சத்தைக் கொடுத்து விடுகிறேன்” 

என்றார் சந்தர் குமார் சேட் அமைதியான குரலில்.  

சோட்டு சப்தமே போட முடியாதபடி அவன் வாயைப் பொத்தி 

கையாட்கள் உதவியுடன் தூக்கிக் கொண்டு வேனில் ஏறி சடுதியில் 

மறைந்தான் அஜய்.  

“முருகேசன் , ஒரு ரெண்டு – மூணு நாள் லீவு எடுக்கிட்டு அப்புறம் 

எப்போதும் போல வேலைக்கு வாங்க, இந்த சோட்டு விவகாரத்தை 

இங்கேயே மறந்துடுங்க. ” என்றார்.  

மெதுவே இருவரும் வெளியே வந்து, நின்றிருந்த  ஆட்டோவில் 

ஏறிக்கொண்டார்கள் 

===================================== 

சற்றுமுன்  முருகேசனும், அவர் மகன் அவினாஷும் சைகை 

மொழியில் என்ன பேசினார்கள் என்று பார்க்கலாம்……ஸாரி, 

கேட்கலாம்……  

“மகனே, உனக்கு ஒண்ணுமில்லையே?” 

“ஒண்ணுமில்லைப்பா. நல்ல காட்டுமிராண்டி கிட்ட மாட்டின போ” 

“இவனோட சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல 

இருக்கும். எனக்கு முன்னாடி இங்க வேலை செஞ்ச அருணகிரி, 

அந்தக் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமா ஒரு 75 லட்சம் 

சுருட்டினாரு . ஆனா, அது இன்னைக்கு வரைக்கும் இந்த 

மரமண்டை சேட்டுக்குத் தெரியாது.” 

“நீ கிட்டத்தட்ட 2 வருஷமா கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்கு 

கொண்டு வந்துட்டு தானே இருக்க? நான் எவ்ளோ தடவை இது 

வேண்டாம், தப்புன்னு தடுத்திருக்கேன்? ஆனா, இப்போ தோணுது, நீ 

செஞ்சது தப்பே இல்ல”  

“இந்த சோட்டு பெரிய திருடன். யாருக்கும் தெரியாம இவனுக்கு 

எவ்ளோ தடவை  பணம் எடுத்துக்கிட்டு போக உதவி 

பண்ணியிருக்கேன். இந்த 2 – 3 வருஷத்துல இங்க இருந்து 

எடுத்துக்கிட்டு போன கிட்டத்தட்ட 1 கோடி ருபாய் பணத்துல 

ராஜஸ்தான்ல இவன் கிம்ஸார் கிராமத்துல சொந்தமா ஒரு வீடே 

கட்டிட்டான். அந்த நன்றிக்கடன் இல்லாம உன்னை இப்படி நாய் 

மாதிரி போட்டு அடிச்சுட்டான்”  

‘அது சரி, நீ செய்யற கோல்மால் ஏதாவது அவனுக்குத் தெரியுமா?” 

“மகனே, நான் அவ்வளவு முட்டாள் கிடையாது” 

“அப்பா, நான் இப்போ சந்தர் குமார் சேட்டைக் கூப்பிட்டு ஒரு 

டிராமா ஆடப்போறேன். நீ எப்போதும் போல லிப்ரீட் பண்ணிக்கிட்டு 

பேசாம வேடிக்கை பாரு” 

“ஜாக்கிரதைடா மகனே” 

Exit mobile version