தவறுவதும் தவறே! – நிம்மி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 128 தவறுவதும் தவறே! – நிம்மி

வீட்டில் நுழைந்ததுமே வெறுமை வரவேற்க்க, அவள் இல்லாத வீட்டின் 

தனிமையை அறவே வெறுத்தான் கெளதம் ஆதித்.. 

கிட்சனிலிருந்து டிபன் வாசம் மணக்க, கதவு திறக்கும் ஒலியில், புன்னகை 

மாறாமல் ஆசையும் வெட்கமும் கலந்து ஓடிவரும் புத்தகம் புது மனைவி இது 

அத்தனையும்  ஒரு வாரம் முன்பு வரை அவன் திகட்ட திகட்ட அனுபவித்தவை..  

ஐடி நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவன் அவன். கை நிறைய 

சம்பளம் இருப்பினும் தனியாக ஒரு நிறுவனத்தை துவங்குவதுதான் அவன் 

தலையாய ஆசையாக இருக்க, அதற்காக தனியே   ப்ராஜெக்ட் எடுத்து செய்து 

கொண்டிருக்கிறான், அதிலும் இப்போது அவன் செய்து கொண்டிருக்கும் 

ப்ராஜெக்ட் வெற்றிபெற்றால் அவன் கனவு நினைவாகிவிடும், 

அதற்காகத்தான் பேய் போல் வேலைசெய்கிறான். இதைப்புரிந்துகொள்ளாத 

மனைவியிடத்தில் பெரும் வருத்தம் கொண்டிருந்தான். 

சென்று சிறிது ஃப்ரெஷப் செய்து கொண்டவன், லேப்டாப் எடுத்துக்கொண்டு 

வேலையில் மூழ்கிவிட, தலைவலி மண்டையப்பிளந்தது,  மனைவியின் 

சுடான காப்பிக்கு மனம் ஏங்க, குனிந்து இரு கைகளாலும் தலையைப் 

பிடித்துக்கொண்டவன் முன் டொக் என்ற சத்தமும் அதைத்தொடர்ந்து 

காபியின் மனமும் வர, நிமிர்ந்து பார்த்தவன் முன் ,கப்பில் ஆவி பறக்கும் 

காபியை வைத்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தாள் நந்தினி அவன் மனைவி.  

திரும்பி செல்லும் மனைவியை எட்டிக் கையைப்பிடித்தவன், இழுத்து தன் 

மடியில் அமர்த்திக்கொண்டான். கழுத்தில் முகம்புதைத்துகொண்டவன், 

ஆழ்ந்த பெருமூச்சொன்றைவிட, அவள் கண்களிலிருந்தும் விழிநீர் வழிந்தது, 

வேலை வேலை என்று உதாசினப்படுத்தியவனிடம் இருந்து எதிர்பார்த்தது 

சிறு புன்னகையைத்தானே, அதற்க்கும் பஞ்சமாகிப்போனதால் அல்லவா 

தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தாள். சூடான விழிநீரில் கலங்கியவன் “நந்துமா.. 

எதுவா இருந்தாலும் இங்கிருந்தே சண்ட போடுடி, ப்ளீஸ்… விட்டுப்போகாத 

கன்னம்மா, இந்த இரண்டு நாளா வேலையே ஓடலடி, பேசாம இருந்தாலும் 

உன் வாசத்திலயே வாழ்ந்திருவேன் போல, ஆனா நீ இல்லாம மூளை வேலை 

நிறுத்தம் பண்ணுதுடி” என்கவும் துள்ளி எழுந்தவள், “ஓ… சார்க்கு அப்பவும் 

வேலை நின்னுபோகுதுன்னுதான் இந்த நந்தினி ஞாபகம் வருதுல்ல, 

எனக்காக என்ன தேடல தானே” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள 

“அடியே, என் பொண்டாட்டி…” என்று திரும்ப இழுத்து மடி 

அமர்த்திக்கொண்டவன், “என் மூளையில இருக்க ஒவ்வொரு செல்லும் நந்து.. 

நந்து.. நந்துவேணும்னு கொடிபிடிக்குதுடி.. அதுக்கு என்ன அர்த்தமாம்..என் 

இஞ்சிமொரப்பா” என்றவன் சிறிதே அவள் இதழ்கடித்து விடுவிக்க.. 

“ஹான் போதும் போதும்.. நம்பிட்டேன், உங்க கம்பியூட்டர் மூளை 

ப்ரொஜக்ட்..ப்ரொஜெக்ட்ன்னுதான் கொடிபிடிக்கும்” என்றவள், “சரி சரி காபி 

ஆறிடும் காபியக்குடிங்க என்றாள் அதே கோபத்தோடு.  

காபியை குடித்துக்கொண்டே, “என் மேல கோபம் போயிடுச்சா” என்று கேட்க, 

ஃபோன்ல கதையெல்லாம் படிக்க கஷ்டமா இருக்குன்னு என்னுடய லேப்டாப் 

எடுக்கதான் வந்தேன் என்றவள், சார் மாசக்கணக்கா பேசவும் நேரம் 

இருக்காதாம், சிரிக்கவும் மாட்டாராம் அப்புறம் எனக்கும் போர் அடிக்காதா” 

என்று முனங்கிக்கொண்டாள்.  “அந்த கதை ஆசிரியர்க்கு என் சார்பா நன்றி 

சொன்னேன் சொல்லு நந்து” என்றான். 

“இப்போ ஆன்கோயிங்க்ல ஒரு கதை எழுதிட்டு இருக்காங்க, சூப்பரா 

இருக்குங்க” என்றவளின் இதழ்களை ஆசையாக நெருங்கியவனை 

காலிங்பெல் சத்தம் இடையிட்டது. அது யாராக இருக்கும் என்பதை 

ஊகித்தவளின் மனம் சுருங்க அவன் கையை உதறிவிட்டு 

எழுந்துகொண்டாள்.  

திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் உள்ளே வந்திருந்தாள் 

அமிர்தவர்ஷினி. வந்தவள் நந்தினியைப் பார்த்ததும், ” ஓ 

வந்துட்டிங்களா, இந்த ரெண்டு நாள்ல, ஆது கிட்ட தட்ட ப்ராஜெக்ட் 

முடியற அளவுக்கு கொண்டுவந்துட்டார் தெரியுமா” என்றவள் இனி 

கஷ்டம் தான் என்றாள் ” வேண்டுமென்றே.  

“ஆதுவாம் ஆது, என்னவோ இவளே பேர் வச்சா மாதிரி” என்று 

முனங்கிய நந்தினி வெளியே சென்றுவள், மனதை திசை திருப்ப தன் 

பேவரிட் ஆத்தாரான ஆருத்ராவிடம் தஞ்சம் அடைந்தாள். 

ப்ராஜெக்ட் கொடுத்த நிறுவனத்துக்கும் கௌதமுக்கும் இடையே 

இன்டெர்மீடியேட்டாக இருப்பது இவள்தான், அதனால் 

சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவனுக்கு.  

ஆருத்ரா கார்த்திகேயன்…. 

ருத்ரா…. என்ற அலறலில் கையிலிருந்த பேனா நழுவ, அதிர்ந்து எழுந்து 

நின்றாள் ஆருத்ரா, “வாமிட் பண்ணிட்டு இருக்கற குழந்தைய கூட 

பார்க்காம என்னடி பண்ணிட்டு இருக்க” என்று உடல்நிலை சரி 

இல்லாத குழந்தையை தோளில் சுமந்தபடி அவள் கணவன் 

நின்றிருந்தான். “இல்லங்க, பாப்பா நல்லா தூங்கிட்டுதான் இருந்தா 

அதான் கதை எழுதலாம்னு உக்காந்தேன்” எனவும்.  

“எப்பவும் கதை..கதை..கதை, அப்படி என்னடி இருக்கு அதுல, ஒழுங்கா 

குழந்தைய பாத்துக்க முடியல, ஊருக்கு உபதேசம் பண்ண வந்துட்டா” 

என்றவன் குழந்தைய அவளிடம் தந்துவிட்டு செல்ல, குழந்தையை 

துடைத்து தூங்கவைத்தவள், பெட்சீட் எல்லாம் மாற்றிவிட்டு திரும்ப 

அமர மணி இரவு 12 ஆகி இருந்தது.  

தூக்கம் கண்களை சுழற்ற, இருந்தும் கண்ணை கசக்கிகொண்டு எழுத 

அமர்ந்தாள். முதற்காரணம் வாசகர்களிம் எதிர்பார்ப்பு, மற்றொன்று 

சிறிதளவே ஆயினும் இதிலிருந்து வருமானம்தான் தற்போது அவள் 

குடும்பத்தை காப்பாற்றிகொண்டிருக்கிறது. முதலில் எல்லாம் அவள் 

எழுதுவதை ஊக்கப்படுத்தியவந்தான் கார்த்திக், தொழிலில் ஏற்பட்ட 

பெரும் நஷ்டம் அவனை இப்படி மாற்றி விட்டது.  

நன்றாக இருந்த போது திளைக்க திளைக்க அவன் அன்பில் 

மூழ்கியவள், அவன் மனநிலை புரிந்து வெறுப்பையும் 

சகித்துக்கொள்ள பழகிக்கொண்டாள். இப்போது அவளுக்கு இருக்கும் 

ஒரே ஆறுதல் கதை எழுதுவது மட்டுமே. அன்றைய அத்தியாயத்தை 

எழுதி போஸ்ட் செய்துவிட்டு படுக்கும்போது மணி இரண்டை தாண்டி 

இருந்தது.  

எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவில் தான் விடாமல் 

எழுதிகொண்டிருக்கிறாள்.  இந்த கதை முடித்து வரும் பணத்தில் 

குழந்தையின் பள்ளி கட்டணம் செலுத்தி விட வேண்டும் என்று 

நினைத்துக்கொண்டாள். 

**** 

ப்ரொஜெக்ட் முடிவடைந்து அப்ரூவல் வாங்கிவிட்டால் போதுமானது, 

பின் முழுமூச்சில் புது நிறுவனம் ஆரம்பித்துவிடலாம் என்று நினைத்த 

கௌதமுக்கு இடியாக வந்தது நண்பனின் போன் கால். வர்ஷினி 

ப்ராஜெக்ட் மொத்ததையும் அவள் பெயரில் சப்மிட் செய்துததோடு,  

ப்ராஜெக்ட் ஆர்டரை அவள் தந்தையின் கம்பெனிக்கு பெற்று 

கொடுத்துவிட்டதாகவும் சொல்ல இடிந்து போய் அமர்ந்துவிட்டான்.  

அவனிடமிருந்து பணத்தை திருடியிருந்தால் கூட உழைத்து திரும்ப 

சம்பாதித்து இருப்பான். 

ஆனால் அவள் திருடிச்சென்றது அவன் கனவை, குடும்பம் மனைவி 

எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு   செய்த பல மாத உழைப்பை 

அல்லவா, நொடிந்து போய் அமர்ந்து விட்டான்.  

அவனின் தோற்றத்தில் பதறி “என்ன” என்று கேட்ட மனைவியின்  

இடுப்பை கட்டிக்கொண்டு கதறியவன், அனைத்தையும் சொல்லி 

முடிக்க, ஆறுதல் சொல்லி தலை கோதியவள், விடுங்க ஆதி, 

உண்மையான உழைப்புக்கு பலன் இல்லாம போகாது, உங்க கனவு 

தள்ளி போய் இருக்கே தவிர அழிஞ்சி போய்டலங்க” என்று அனைத்து 

கொள்ள, அவனும் பள்ளிப்பிள்ளையாய் மடி சாய்ந்து கொண்டான். 

************** 

தான் வார்த்தைகளால் காயப்படுத்தும்போது,, சிறு புன்னகையுடன் 

கடந்து விடும் மனைவி, இன்று அமர்ந்திருந்த தோற்றம் கவலையை 

தர, அருகில் சென்ற கார்த்திக், “ஆருமா …” என்றழைத்து அருகில் 

அமரவும், கணவனின் வெகுநாளைய அழைப்பில் உடைந்து அவன் 

தோள் சாய்ந்து கதறியவள், “ரித்தி… ராப்பகலா கண் முழிச்சி நான் 

எழுதினத, யாரோ,  ஆன்லைன் சேல்ஸ் குடுத்த மறுநாளே pdfல போட்டு 

இருக்காங்கப்பா” என்று கதறி அழுதவள், “இதுக்காக கிட்ட தட்ட 8 

மாசம் சரியான தூக்கம் இல்லாம உழைச்சிருக்கேன் ரித்தி.., 

இதவச்சிதான் பாப்பா ஃபீஸ் கட்டலாம்னு இருந்தேன், இப்போ இப்படி 

ஆகிடுச்சு ” என்று கலங்கினாள். 

பெருவிரலால் கண்களை துடைத்து நெற்றியில் இதழ்பதித்தவன், 

“அவங்களால உன் கதையத்தான் திருடமுடியுமே தவிர உன் 

கற்பனைய இல்லடா, உன்னை முடக்க எத்தனை தடை வந்தாலும் சரி, 

அதைவிட அதிகமா எழுந்து நிக்கணுமே தவிர இப்படி உடையக்கூடாது 

டா” என்றவன் மேலும் “சாரிடா நானும் என்னுடைய இயலாமையை 

உன்கிட்ட காட்டிட்டேன், பாப்பா ஃபீஸ் பத்திலாம் நீ கவலைப்படாத  

இப்போ புதுசா ஆர்டர் கிடைச்சிருக்கு, கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் 

சரி பண்ணிடுவேன்மா,  வெரி சாரி டா ” என்று மன்னிப்பு கேட்டான். 

“எனக்கு தெரியும் ரித்தி.. உங்க நேச்சர் இது கிடையாதுன்னு, 

கண்டிப்பா நாம மீண்டு வருவோம்ங்க என்னதான் pdf போட்டாலும் புக் 

வாங்கி படிக்கிறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க” என்றவளை 

“தட்ஸ் மை கேர்ள்” என்று தோளோடு அணைத்துக்கொண்டான். 

கெளதம் ஆதித் தூங்கி எழுந்த போது, மனைவி லேப்டாப்பில் எதையோ 

டென்ஷனாக தேடிக்கொண்டிருப்பதை பார்த்தவன், என்னவென்று 

கேட்க “இல்லங்க, என்னோட பேவரிட் ஆத்தரோட கதைங்க, படிச்சிட்டு 

இருந்தேன் இடையில கொஞ்சம் படிக்காம மிஸ் பண்ணிட்டேன், 

இப்போ அந்த லிங்க் பார்த்தா காணோம்ங்க, அதோட முடிவு தெரியாம 

எனக்கு மண்டையே வெடிக்கும்க” என்றவள், திடீரென துள்ளி குதித்து       

“ஐ…., இதோ முழு கதையும் யாரோ pdf குடுத்து இருக்காங்கங்க” 

என்றாள். 

“என்னடி சொல்ற யாரோ குடுத்து இருக்காங்களா, அந்த ரைட்டர் 

தரலையா” எனவும் “இல்லங்க இது வேற யாரோ அவங்க கதையை 

அப்படியே pdf போட்டு இருக்காங்க” என்றாள். 

“அடியே.. அவங்க ஆன்லைன் போட்டபோதே படிக்காதது உன் தப்பு, 

உனக்கு வேணும்னா புக் வாங்கி படி., உனக்கு வாங்கி படிக்க வசதி 

இல்லையா.. எப்படியும் கொஞ்சம் நாள் கழிச்சி ஃப்ரீ குடுப்பாங்க 

தானே வெயிட் பண்ணி அப்போ படி ” என்றவன் 

“திருடினா மட்டும் இல்லடி, திருட்டுக்கு துணைப்போறதும் தப்புதான். 

என்னுடைய உழைப்பை ஒருத்தி திருடறப்போ நமக்கு எவ்ளோ 

வலிச்சது, அதே வலிதானடி அந்த ரைட்டருக்கும் இருக்கும், அவங்க ஒரு 

பெண்ணா எவ்ளோ தடைதாண்டி எழுதறாங்களோ..? 

“திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு 

சொல்வாங்க, திருட்டு பொருளை வாங்காம இருந்தாலும் திருட்டை 

ஒழிச்சிர முடியும் ” என்றவன் அவளுக்கு அந்த புக்கையும் உடனே 

வாங்கி தந்தான். 

“நீங்க சொல்றது 100% சரிங்க” என்றவள் இனி இப்படி பண்ண 

மாட்டேன் என்கவும் “தட்ஸ் மை கேர்ள் ” என்று மூக்கை பிடித்து ஆட்டிட, 

அவன் போன் ஒலித்தது. எடுத்து காதில் வைக்கவும், எதிர்முனையில் 

சொன்ன செய்தியில் மனைவியை தூக்கி சுற்றியவன், “கண்ணம்மா,  

ப்ராஜெக்ட் நமக்கே கிடைசிச்சுருச்சி, வர்ஷினியால ப்ராஜெக்ட 

எக்ஸ்பிளைன் பண்ண முடியலபோல, அதனால ப்ராஜெக்ட் நமக்கே 

சாங்க்ஷன் பண்ண போறாங்கலாம், கான்ராக்ட் சைன் பண்ண வர 

சொல்லி இருக்காங்க” என்று சந்தோசமாக கட்டிக்கொண்டான். 

உண்மை உழைப்பு வீண் போவதில்லை.. 

முற்றும். 

Exit mobile version