மு.முகேஷ் கண்ணன்
ஏன்மா ஜட்ஜ் ஐயா அவ்வளவு பொறுமையா கேட்டுட்டு இருக்காரு… கொஞ்சம் கூட பயமே இல்லாம நீ பேசாம நின்னுடு இருக்க… எதுக்கு உன் புருஷன கொன்ன … உன் பிள்ளையும் ஒரு வாரமா காணோம்.. என்று அரசு தரப்பு வக்கீல் குற்றவாளி கூண்டில் நிற்கும் தேவியை கேட்க…
மௌனம் மட்டுமே அவளிடம் பதிலாக வெளி வந்தது…
இந்த மா இப்படி நின்னுக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் உங்கிட்ட தான் மா பேசிட்டு இருக்கோம்… ஒன்னு ஆமா னு சொல்லு இல்லேன்னா இல்லன்னு சொல்லு..
எங்களுக்கு உன்ன விட்டா வேற கேஸ் இல்லைனு நினைக்குரியா…கடைசியா கேட்குறேன் உன் புருஷன நீ தான் கொன்னுட்டேனு ஒத்துக்குரிய இல்லையா..
மறுபடியும் உம்ம்ன்னு இருந்தா உனக்கும் உன்னொருத்தவனுக்கும் தொடர்பு இருந்துச்சு உன் புருஷனுக்கு தெரிஞ்சனால அவனையும் கொன்னுட்டு உன் பொண்ணையும் காணா புணம் ஆக்கிடனு உன் மேல கேஸ் போட்டு உள்ள போட்டுருவேன் பார்த்துக்கோ.. படிச்சா பொண்ணா வேற தெரியுற உண்மைய சொல்லு நீ தான் செஞ்சியா.. என்று ஜட்ஜ் கேட்க…
தேவி ஏளனமாய் சிரித்து விட்டு பதில் பேச ஆரம்பித்தாள்… இந்த உலகம் முழுவதும் ஒரு பொண்ண வெறும் ஆணுக்கு வேலை செய்யும் அடிமையாகவும் காமத்தை தீர்க்கும் பொம்மையாகவும் தான பார்க்குது..
ஏன் மா நாங்க என்ன கேட்டா நீ என்ன மா பதில் சொல்ற.. அந்த வக்கீல் கேட்க…
சார் ஒரு நிமிஷம் இவ்வளவு நேரம் நா பேசலேனு என்கிட்ட சண்டை போட்டிங்க.. இப்ப நா பேசுறேன்னு சண்டை போடுறீங்க.. நா பேசவா வேணாமா ஜட்ஜ் ஐயா என்று தேவி கேட்க… பேசுமாரு தலை ஆட்டினார்..
ஒரு பொண்ணா இந்த உலகத்துல பிறந்துட்டா அவ என்ன என்ன அனுபவிக்குறானு உங்களுக்கு என்ன தெரியும்…போய் உங்க பொண்டாட்டி கிட்டையும் உங்க பொண்ணுக்கிட்டயும் கேளுங்க சொல்லுவாங்க ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு நரக வேதனை அனுபவிக்குறாங்கனு…
ஒரு பொண்ணு ஒரு ஆண கொன்னவுடனே துள்ளிக்கிட்டு வரீங்க…
இப்ப என்ன மா சொல்ற நீ தான் கொன்னேனு சொல்றியா…
ப்ளீஸ் என்ன கொஞ்சம் பேச விடுங்க… நா கொஞ்சம் நேரம் பேசலேனு அவ்வளவு கோவ பட்டிங்களே.. எத்தனை பொண்ணுக அவங்க கஷ்டத்த வெளிய சொல்லாம தவிக்குறாங்க அப்ப மட்டும் ஏன் யாருமே கேட்கல…
அதுக்குன்னு ஒவ்வொரு வீட்லயும் எங்கள போய் எட்டி பார்க்க சொல்றியா என்று மறுபடியும் வக்கீல் வாய் எடுக்க…
நான் ஒன்னும் அடுத்தவங்க வீட்டை எட்டி பார்க்க சொல்லல உங்க வீட்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்கனு தான் சொல்றேன்… இந்த உலகத்து பெத்த அப்பனையும் நம்ப முடியல வளர்த்த பிள்ளையும் நம்ப முடியல.. அண்ணன் தம்பி பிரண்ட் சொந்த காரன் எவனையும் நம்ப முடியல… கேவலம் ஒரு 5 நிமிஷம் சொகத்துக்காக ஏன் இப்படி பன்றாங்க… ஆமா என் புருஷன நான் தான் கொன்னேன்.. ஏன் கொன்னேன் இந்த அற்ப சொகத்துக்காக..அப்போ ஏதோ சொன்னிங்களே எவன் கூடயோ தப்பான உறவு வச்சிருக்கேனு அத நாலத்தான் என் புருஷனையும் பொண்ணையும் கொன்னேனு…
எப்படிங்க எந்த ஒரு கூச்சமும் இல்லாம ஒரு பொண்ண தப்பா பேசுறீங்க… சரி என்ன பத்தி என்ன தெரியும் உங்களுக்கு…அப்படிதான எந்த ஒரு பொண்ணையும் தப்பா பார்ப்பீங்க…
ஒரு ஆண் எப்படி இருந்தாலும் அது அவனுக்கு எந்த ஒரு பாதிப்பையும் பெரிசா தெரியாது..அவன் இப்படி இருக்குறதுக்கு கூட அவன் அம்மாவையோ அல்லது மனைவியையோ தான் பழி சொல்லுவாங்க… ஏன் எங்களுக்கு மட்டும் இந்த கஷ்டம் பொண்ணா பிறந்ததுக்கா… தினம் தினம் அவ்வளவு கஷ்டம் அனுபவிக்குறோம்
சரி உன் புருஷன என்ன பண்ண உன் குழந்தை எங்க அத முதல சொல்லு…
சொல்லுறேன் சொல்லுறேன் .. என் புருசனும் படிச்சவன் தான்… நல்ல எடுத்துல தான் வேலை பார்த்தாரு.. தினமும் குடி… அவர் ஆசைக்கு தினமும் எனக்கு ஆசை இருந்தாலும் இல்லேன்னாலும் நா நைட் அவருக்கு துணையா படுக்கணும்… நானும் என் வெட்கத்தை விட்டு எல்லாம் ஒத்துழைச்சேன்…. இந்த விஷயம் படிச்சவன் படிக்காதவன் நல்லவன் கெட்டவன் எதுவும் கிடையாது…
என் பொண்ணுக்கு அஞ்சு வயசு தான் ஆகுது…மனுஷன் குடிச்சுட்டு வந்தா கட்டுன பொண்டாட்டிக்கும் பெத்த பிள்ளைக்குமா வித்தியாசம் தெரியாது..சின்ன பொண்ணுங்க என்ன தெரியும்…ச்சீ நினச்சு பார்த்தாலே என்று தேவி அழுக ஆரம்பித்து விட்டாள்…
என்னங்க தெரியும் அந்த பச்ச மண்ணுக்கு… கடைக்கு போய்ட்டு வந்து பார்க்குறேன்.. ஐயோ கடவுளே என் பிள்ளைய நான் அப்படியா பார்க்கணும்.. கதறினாள்.. எந்த ஒரு அம்மா தான் பெத்த பொண்ண அந்த நிலைமைல பார்த்துறவே கூடாது.. இப்பையும் அத நினச்சு பார்த்தா என் உடம்பு அப்படி நடுங்குது…
இவன் குடி போதைல அரைகொறைய கிடக்குறான்..என் பொண்ணு அங்க சொல்ல முடியாத இடத்துல இருந்து ரத்தம் வழியுது… ஐயோ என் தங்கமேனு என் பொண்ண என் மடில போட்டு கதறுறேன்… அம்மா அடில ரொம்ப வலிக்குது மா..என்னால தாங்க முடியல..தலை கிறு கிறுன்னு சுத்துதும்மா..அப்பாட்ட கெஞ்சுனேன் அம்மா.. முதல கொஞ்சிட்டு இருந்தாருமா திடீர்னு எல்லா எடத்துலையும் முத்தம் கொடுத்தாரா…அப்புறம் நகத்தை வச்சு உடம்பு முழுக்க கீறிட்டாரு மா..வலி தாங்கமா ஓடுனேன் மா… அப்பா என்ன தூக்கி செவுத்துல தூக்கி எரிஞ்சுட்டாரு .. இங்க பாரு என் பின்னாடி மண்டைல இருந்து எப்படி ரத்தம் வருதுன்னு..எனக்கு மயக்கமா வருது மா… அப்புறம் அப்பா என்று வாய் எடுக்க… கண்ணை முடிய என் பொண்ணு கண்ணை திறக்கல… தேவி தன் கண்ணை துடைத்து கொண்டு அதுக்கு அப்புறம் என் பொண்ண அந்த நாய் என்ன பண்ணிருக்கும்னு உங்களுக்கு தெரியும்…
எனக்கு அவன் மேல கோவம்… இல்ல இல்ல வெறி வந்துச்சு ..
அதான் உன் புருஷனை கொன்னுட்டியா..அப்புறம் எதுக்கு போலீஸ் கோர்ட் லாம் இருக்கு…..
ஓஓஓஓ இங்க கூட்டிட்டு வந்தா என் பொண்ணு உயிரோட வந்துருவாளா..
சரி உன் புருஷன கொன்னுட்ட உன் பொண்ணு உயிரோட வந்துருச்சா…
வரல ஆனா எனக்கு சந்தோசமா இருக்கு..
இப்படி கொன்னுட்டா எல்லாம் சரி ஆகிடுமா… ஆளு ஆளுக்கு பழி வாங்குறேன்னு கிளம்பிட்டா இந்த உலகத்துல யாரும் உயிரோட இருக்க முடியாது… அப்புறம் எதுக்கு நாங்க இருக்கனும் என்று வக்கீல் கத்த..
சரி இங்க என் புருஷன் வந்துருந்தா என்ன பண்ணிருப்பீங்க ..
தண்டனை வாங்கி கொடுத்துறுப்போம்..
ஹாஹாஹா நிஜமாவா எத்தன வருஷம் கழிச்சு..
இது என்ன கேள்வி..
இல்ல சொல்லுங்க எத்தனை வருஷம் கழிச்சு என்ன தண்டனை கொடுப்பிங்க..
விசாரணைன்னு பேருல கொறஞ்சது ஒரு பத்து வருஷம் போயிரும்.. அதுக்கு அப்புறம் குற்றம் நிரூபிக்க பட்டதுனு அதிக பட்சம் போக்ஸோ சட்டம் அவ்வளவு தான..இதுல என்ன நீதி கிடைக்க போது சொல்லுங்க…
வேற என்ன பண்ணனும்னு நினைக்குற..
நீங்க எதுவும் செய்யவேணா நானே அதான் செஞ்சுட்டேன்…
அப்ப இதுக்கு கொலை தான் முடிவுன்னு சொல்றியா…
எனக்கு தெரியல..ஆனா உங்களால ஏன் ஒரு தெளிவான தண்டனை கொடுக்க முடியல…
என்ன? அப்படி நடக்கலேன்னு நீ சொல்ற..
எல்லா விஷயமும் தான்..பொள்ளாச்சில அத்தனை பொண்ணுங்க பாதிக்க பட்டங்களே என்ன அந்த பொண்ணுகளுக்கு நீதி கிடைச்சுருச்சு… தைரியமா வெளிய தான சுத்துராங்க.. கேட்டா ஆளும் கட்சி சப்போர்ட் இது மாதிரி எத்தனையோ கேஸ் கண்ணுல மண்ணை தூவி காணாம போச்சு..
ஏன் இல்ல நிர்பையா கேஸ் இல்ல…
ஹாஹாஹா எத்தனை வருஷம் கழிச்சு..அதுக்கும் எத்தன எதிர்ப்பு.. ஒவ்வொரு நாளைக்கு எத்தனை குழந்தைகள் கற்பழிச்சு கொல செய்ய படுறாங்க…ஒரு கேஸ் மட்டும் இன்னும் பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்கீங்க… இந்த அரசும் யாருக்கான அரசுனு தெரியல மக்களை தவிர மத்த எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கு..அவங்களுக்கு தேவை அரசு கஜானால கல்லா கட்டுனா போதும்….மதுக்கடை இன்னும் தெருவுக்கு தெரு பத்து ஓபன் பண்ணுவோம்.. எவன் குடும்பம் எப்படி அழிஞ்சாலும் எங்களுக்கு கவலை இல்லை அப்படி தான… எத்தனை பெண்கள் ரோட்ல நின்னு தினமும் புள்ள குட்டிகளோட போராடிட்டு இருகாங்க….அவங்களுக்கு என்ன பரிசு தந்தது ..நீங்க சொன்னிங்களே இந்த போலீஸ் கோர்ட் அரசுலாம் வெறும் தடியடி மண்டை ஒடஞ்சு ஆஸ்பத்திரி அனுப்புனது தான்..
இப்படி இருக்குற உங்கள்ட்ட நாங்க எங்க எதிர் பார்க்குறது நீதிய…
என்ன மா பெரிசா சும்மா சும்மா பொண்ணுங்கனு..நீ என்ன பெண் உரிமை பேசுற ஆளா..
கண்டிப்பா இல்ல எங்களையும் ஒரு உயிரா மதிங்கன்னு தான் சொல்றேன்… சரி ஒரு கேள்வி கேட்குறேன் பதில் சொல்லுங்க…
உடல் அளவிலும் மன அளவிலும் அதிகம் வலிமை பெற்றவர் யார்… யார் வேணா பதில் சொல்லலாம் …
அனைவரும் ஆண் என்றே பதில் அளித்தனர்…
ஹாஹாஹா என்று தேவி சிரிக்க…
ஜட்ஜ் வெறுப்புடன் இதுவும் பொய்னு சொல்ல போற அப்படி தான …
ஆமா கண்டிப்பா ஒரு பிரசவ வலிய தாங்குற சக்தி இருக்கா ஒரு மாதவிடாய் டைம்ல வர வலிய தாங்குற சக்தி இருக்குதா உங்களுக்கு..அத விட ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனைனா அத வீட்ல வந்து பொண்டாட்டிட்ட காட்டுறது..ஆனா பொண்ணுக அப்படி இல்ல அவ்வளவு வேலை பார்த்து உங்கள ஆபீஸ் அனுப்பி பசங்கள ஸ்கூல் அனுப்பி சமைச்சு சாப்பிட்டு .. நைட் நீங்க குடிச்சுது வந்து அடிச்சாலும் அடுத்த நிமிஷம் சாப்பாடு எடுத்து வைப்பா..இத விட பொண்ணு வலிமைன்னு நிரூபிக்கிறது… ஒரு தல வலியவே தாங்க முடியாது உங்களால…
இது தான் முழுமையான வலிமை…சும்மா ஒரு பொருளை தூக்குறது பொண்டாட்டிய அடிக்குறது வலுக்கட்டாயமா ஒரு பொண்ண கெடுக்குறது வலிமையும் கிடையாது ஆண்மையும் கிடையாது.. பொண்ணுகளுக்கு பாதுகாப்பா இருக்குறது தான் ஆண்மை.. பொண்ணுகளுக்கு தேவையான உதவி செய்யுறது தான் வலிமை… அப்புறம் உன்னொரு விஷயம் ஒரு பொண்ணுக்கோ குழந்தைக்கோ தொடர்ந்து இதுபோல நடக்க கூடாதுனா கண்டிப்பா சட்டம் கடுமை ஆக்க படவேண்டும்.. தண்டனை கொலையாக தான் இருக்க வேண்டும்..தூக்கு தண்டனை கொடுக்குறீங்க அதுவும் ஒரு இருட்டு ரூம்ல வெறும் செய்தியா மட்டும் தான் வெளிய வருது..
மக்கள் கண் முன்னாடி நடந்தா தான் குற்றம் முழுவதும் குறையனாலும் கொஞ்சமாச்சும் குறைய வாய்ப்பு இருக்கு..இப்படியே சும்மா தண்டனை கொடுக்காம தள்ளிகிட்டே போனா பயம் இல்லாம தான் போகும்… நா சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்..இதுக்கு மேலயாவது உங்க மனச்சாட்சிக்கு பயந்து நீதியை காப்பாத்துங்க…உங்க பொண்ணு பொண்டாட்டி அம்மா எல்லாரையும் ஏளனமா பார்க்காம..ஒரு உயிரா பாருங்க..நல்லவன் மாதிரியே நடிப்பானுக.. பார்த்துக்கோங்க… அதே மாதிரி நீங்களும் எந்த ஒரு பொண்ணு கண்ணீருக்கும் காரணமா இருக்காதிங்க …இப்ப எனக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க சந்தோசமா ஏத்துக்குறேன் என்று தேவி சிரித்து கொண்டே சொல்ல… அங்கு அனைவர் முகமும் இருள் பரவியது…
நன்றி…