கடைசி காலம் ???

– ப. ஷங்கரி

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் !!!

1

ஒருநாள் காலைவேளையில்…

சாலையின் இருபுறத்திலும் சாமானியர்களின் ஜனக்கூட்டம். வாகனங்களின் இரைச்சல் வானத்தையெட்டுமளவு கேட்கிறது.

சிறிது தூரத்தில்…

ஒரு அழகிய பூந்தோட்டம் அமைந்துள்ளது. அதன் பூக்களின் மணமும், வாசனைப் பொருட்களின் மணமும், சாலையெங்கிலும் பரவி மணம் பரப்பிக் கொண்டிருந்தது. இறைவனின் இசையும் இரண்டறக் கலந்ததாகவே இருந்தது.

இறைவனை அனுதினமும் பாக்களால் வழிபாடு செய்து வந்தவர்கள் அட்சயாவும், திருமகளும், கையில் மங்கள பொருட்கள் அடங்கிய கூடையுடன், அன்றைய தினமும் அதே போன்று இருவரும் சிவாலயத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென யார் குரலோ கேட்கிறது… கேட்டக் குரல் போல் அல்ல? யாரது?…

பல நாள் பயனளித்த மரம் ஒருநாள் விழுந்தாற்போல, வயதான மனிதர் சாலையில் மயங்கியிருக்கிறார்.

காலத்தின் கவனத்தில் கண் பார்க்க மறுத்தனர் சிலர். சிவாலயத்தை நோக்கிச் சென்றவர்கள் அவரைத் தண்ணீர் தெளித்து எழுப்பி ஒரு மரநிழலில் அமர வைத்தார்கள்.

பிறகு…

யார் நீங்கள் என்றார்கள்?

2

ஒரு அழகிய கிராமம்…

பறவைகளின் இனிமையான ஓசையை கேட்டப்படியே வேப்பமரத்தின்  நிழலில் பலர் அமர்ந்திருப்பார்கள்.

மனிதர்களை மட்டுமில்லாது, மாக்களையும் உறவுகளாக எண்ணிய காலம் அது.

குழந்தைகள் அன்போடும், பண்போடும் மற்றவர்களிடம் பழகுவார்கள்.

சரி ஐயா…

நகரத்திற்கு தாங்கள் என்ன வேலையாக வந்தீர்கள்? என்றாள் அட்சயா…

மன்னிக்கவும் அம்மா!…

இதுதான் நான் வாழ்ந்த கிராமம், உங்களால் நகரம் என அழைக்கப்படுகிறது.

என்னக் கூறுகிறீர்கள்?

ஆம்…

நாகரீகம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் இது.

நாங்கள் எங்கள் தேவைக்காக சாலைகளையும், வாகனங்களையும்  கண்டறிந்தோம். இதில் என்ன தவறுள்ளது.

அந்தச் சமயத்தில் இரைச்சல் மிகுந்தச் சாலையில் வாகனங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பச்சிளம் கன்று, பயந்துப்போன பார்வையில் நின்றுக் கொண்டிருந்தது.

அதோ பாருங்கள்… இது தான் உங்கள் சுயநலம்!

நாங்களும் அதை அடித்திருக்கிறோம்…

ஆனால் இறக்கும் நாளை எண்ணி உயிரினங்கள் வாழும் வரையில் கொடுமை செய்யவில்லை.

எந்த உயிரினங்கள் உயிர் வாழ எண்ணுகிறது, உங்கள் நாகரீகத்தில்?

இயற்கையை சிதைத்து விட்டது உங்கள் தலைமுறை.

நான் ஓரிரு நாட்களில் இறந்துவிடுவேன், என்னை நினைத்துப் பயமில்லை.

உங்களைப் போன்றவர்களிடம் நான் கரம்கூப்பி கேட்பது, இயற்கை அதன் வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் உள்ளது. “காப்பாற்றுங்கள் இயற்கையை” என்றுதான்…

சரி இதையெல்லாம் உங்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது. நான் போய் வருகிறேன்.

மனவேதனை அடைந்த அட்சயாவும், திருமகளும் சிவாலயத்தை விடுத்து வீடு திரும்பினார்கள்.

3

மாலை நேர வழிபாடும் முடிந்தது. ஏனோ! இச்சை இறைவன் மீது செல்லவில்லை இருவருக்கும். அந்த வயதான மனிதனின் கருத்தின் மீது சென்றது.

இரவு தூக்கம் இடம் தெரியாமல் போனது. மறுநாள் காலையில் இருந்து தாங்கள் காணும் பொருட்களில் அவருடைய கருத்தை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினார்கள். அனைத்தும் உண்மை இனி என்ன செய்வது?

மரங்களை வளர்த்தனர். மாட்சிமைகள் பலப் புரிந்தனர்.

இதுதான்,

காலத்தின் காட்சி!

கண்ணீரின் வீழ்ச்சி!

ஞாலத்தின் சாட்சி!

– கதைப் படிக்கலாம் – 99

இதையும் படியுங்கள் : கூலி

Exit mobile version